தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், பி.காம்.,- பி.எல்.,
(ஹானர்ஸ்) என்ற ஐந்தாண்டு பட்டப் படிப்பை, இந்தாண்டு அறிமுகப்படுத்தி
உள்ளது. சட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், 20ம் தேதி துவங்குகிறது.
இந்தியாவில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட
பல்கலையில் தான் இப்படிப்பு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2வில், வணிகவியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்தவர்கள்
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை,
செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில்,
அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், பி.ஏ., -பி.எல்.,
ஐந்தாண்டு சட்டப் படிப்பும், பி.எல்., என்ற மூன்றாண்டு சட்டப் படிப்பும்
வழங்கப்படுகிறது.
ஐந்தாண்டு பி.ஏ.,- பி.எல்., சட்டப் படிப்பிற்கு, 1,052 இடங்களும்,
மூன்றாண்டு பி.எல்., சட்ட படிப்பிற்கு, 1,262 இடங்களும் உள்ளன. சென்னையில்
உள்ள சட்ட பள்ளியில் நடத்தப்படும் பி.ஏ.,- பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில்,
120 இடங்களும், பி.காம்.,- பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பிற்கு, 60 இடங்களும்,
பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில், 60 இடங்களும் உள்ளன.
இப்படிப்புகளுக்கு, வரும், 20ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட
உள்ளன. விண்ணப்பங்களை, ஜூன், 14ம் தேதிக்குள், மாணவர்கள் சமர்ப்பிக்க
வேண்டும். அடுத்த, 10 நாட்களில், மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல்
வெளியிடப்படும். இவ்வாறு, சங்கர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...