ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத்
தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை)
நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நடைபெற்ற மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் மாணாக்கர் தாம் தேர்ச்சி
பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் (பாடங்களின் எண்ணிக்கை
வரம்பின்றி), எதிர்வரும் ஜூன்/ஜூலை 2013 பருவத்தில் நடைபெறும் சிறப்பு
உடனடித் தேர்வில் தேர்வெழுதலாம்.
பள்ளி மாணாக்கராய்த் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்/வருகை புரியாதோர், ஜூன்
பருவத்தில் நடைபெறும் சிறப்பு உடனடித் தேர்வெழுத ஆன்-லைன் மூலம் மட்டுமே
விண்ணப்பிக்க வேண்டும் எனவும், S.H வகை விண்ணப்பத்தை எக்காரணம் கொண்டும்
வழங்கக்கூடாது எனப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை
பள்ளி மாணாக்கர் www.dge.tn.nic.in
என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் விண்ணப்பித்து, அதில் கோரப்படும் விவரங்களை
பதிவு செய்ய வேண்டும். மாணவர் தமது புகைப்படத்தினை ஸ்கேன் செய்ய வேண்டும்.
State Bank of India சலானை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில்
குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI)ன் ஏதேனும்
ஒரு கிளையில் 27.05.2013 -ற்குள் செலுத்தவேண்டும். செலுத்தும் நேரம்
வங்கியின் விதிகளுக்குட்பட்டது. ஆன்-லைன் விண்ணப்பத்தின் வலதுபக்கத்தில்
உரிய இடத்தில் மாணாக்கர் தனது மற்றுமொரு புகைப்படத்தினை ஒட்டி
“attestation” (பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அல்லது Gazetted Officer இடம் )
பெற வேண்டும். பின்னர்,(1) ஸ்கேன் செய்த மாணவரின் புகைப்படத்துடன் கூடிய
“Confirmation copy” எனக் குறிப்பிடப்பட்ட ஆன்-லைன் விண்ணப்பம்,(2)
தேர்வுக்கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் செலுத்திய சலான்
(Department Copy) இரண்டையும் இணைத்து மாணாக்கர் தாம் பயின்ற பள்ளித்
தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.பள்ளித் தலைமை ஆசியர்கள்
விண்ணப்பங்களை பத்து இலக்கம் கொண்ட விண்ணப்ப எண்ணின் ஏறுவரிசையில்
அடுக்கிப் மாணாக்கரின் பெயருடன் பட்டியலிட்டு, பட்டியலின் இரு நகல்களுடன்
ஆன்-லைன் விண்ணப்பங்களை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில்
28.05.2013 –ற்குள் (பகல் 12 மணிக்குள்) தவறாமல் ஒப்படைக்க
வேண்டும்.பள்ளிகளால் ஒப்படைக்கப்படும் ஆன்-லைன் விண்ணப்பங்களை கல்வி
மாவட்டவாரியாக கட்டி, 29.05.2013 அன்று தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில்
முதன்மைக் கல்வி அலுவலகங்கள் ஒப்படைக்க வேண்டும்.எனவே. இப்பணியின்பால்
சிறப்புக் கவனம் செலுத்திட பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:
1. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
2. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத
அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:
மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத ஒவ்வொரு
பாடத்திற்கும் ரூ.50/-வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக
ரூ.35/- ம் செலுத்தவேண்டும். Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட State
Bank of India challan மூலமே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப்
இந்தியா வங்கியின் எந்தவொரு கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குர்,
சென்னை-6 என்ற பெயரில் தேர்வுத் கட்டணத் தொகையினை செலுத்தலாம். பதிவிறக்கம்
செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தவறாமல்
குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே
எந்தவொரு சந்தேகங்களுக்கும், தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ அல்லது
தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்த
விண்ணப்பத்தினை ஒளிநகல் (Photocopy) எடுத்து தனித்தேர்வர்கள் தங்கள் வசம்
பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
ஆன்/லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதிகள் :
தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 23.05.2013 (வியாழக்கிழமை)
முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை அனைத்து நாட்களிலும்
தங்கள் விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்த
விண்ணப்பத்தினையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான SBI சலானையும்
27.05.2013 நண்பகல் 12 மணிவரை வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள
முடியும்.தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு
கிளையிலும் செலுத்தவேண்டிய இறுதி தேதி 27.05.2013( திங்கட்கிழமை). செலுத்த
வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும்.
ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல்:
அ) பள்ளிமாணாக்கர் உடனடித் தேர்விற்கான Confirmation copy எனக் குறிப்பிட்ட
ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI சலானை இணைத்து
அவர்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 27.05.2013-ற்குள் சமர்ப்பிக்க
வேண்டும்.
ஆ) மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்ச்சி
பெறாதோர் உடனடித் தேர்விற்கான Confirmation copy எனக் குறிப்பிட்ட
ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI சலானை இணைத்து
அவர்தம் வருவாய் மாவட்டத்திற்குரிய அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை
இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம்
அனுப்பும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிரரகரிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...