தமிழக சட்டமன்றத்தில் பேரவை விதி 110-ன் கீழ்
இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காக
அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் 2013-14ம் கல்வியாண்டில் புதியதாக 54
தொடக்கக் பள்ளிகள் துவக்கவும், அப்பள்ளிகளுக்கு தேவைகேற்ப ஒரு
தொடக்கப்பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் வீதம் 54 தொடக்கப்பள்ளி தலைமை
ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 54 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
ஏற்படுத்தவும்.
50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக
தரம் உயர்த்தி, அப்பள்ளிக்களுக்கு தேவையான 50 உயர்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் பணியிடங்களும் மற்றும் ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி
ஆசரியர் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கவும்
உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 2013-2014ம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப்
பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும், மேல்நிலைப் பள்ளி
ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமையாசிரியர்
பணியிடங்கள் மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு 9 முதுகலை ஆசிரியர் பணியிடம்
வீதம் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து ஆக மொத்தம் 1408
ஆசிரிய பணியிடங்கள் தோற்றுவித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...