மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளையடுத்து,
அதற்கான மதிப்பெண் பட்டியல், ஜுன் 20ம் தேதி வழங்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள், சம்பந்தப்பட்ட
பள்ளி தலைமையாசிரியர்களிடமும், தனித் தேர்வர்கள், தாங்கள் தேர்வெழுதிய
மையங்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தேர்வில் தோல்வியடையும்
மாணவர்கள், ஜுன் மற்றும் ஜுலை மாதம் நடக்குமூ உடனடி தேர்வில் பங்கேற்கலாம்.
www.dge.tn.nic.in என்ற
இணையதளம் மூலமாக, உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜுன் 3 முதல் 5ம்
தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதற்கான தேர்வுக் கட்டணத்தை ஜுன்
6ம் தேதிக்குள், SBI வங்கியின் ஏதேனுமொரு கிளையில் செலுத்த வேண்டும்.
பத்தாம் வகுப்பு மார்ச் தேர்வை தனித்தேர்வாக எழுதி, மீண்டும்
தோல்வியடைந்தவர்கள், விண்ணப்பத்தை, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர்
அலுவலகத்தில் ஜுன் 10ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உடனடித்
தேர்வுகள், ஜுன் 24ம் தேதி முதல் ஜுலை 1ம் தேதி வரை நடக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...