ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் கல்வி பயிலும்,
எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பினருக்கு பள்ளி வாரியாக இலவச
புத்தங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
கடந்த கல்வியாண்டில் பயின்ற, ஒன்று முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை அனைத்து
வகுப்பினருக்கும், முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து, அனைவரும் கோடை
விடுமுறையில் உள்ளனர். அனைத்து வகுப்பினருக்கும் தேர்வு முடிவுகள்
வெளியிடும் பணியில் கல்வித்துறை தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்களை, மாவட்டம் வாரியாக
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. அரசு
பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகம்
மூலமாக, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
அடுத்த கல்வியாண்டில் கல்வி பயிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2
வகுப்பினருக்கான புத்தகம், பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஈரோடு
மாவட்டத்தில் உள்ள இரு கல்வி மாவட்டத்துக்கான புத்தகங்களும் புத்தகங்கள்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புக்கான தமிழ் புத்தகங்கள், பத்தாயிரத்து, 500
புத்தகங்களும், ஆங்கில புத்தகங்கள், 27 ஆயிரத்து, 300 புத்தகங்கள், கணிதம்
மற்றும் அறிவியல் பாடத்துக்கு தலா, 25 ஆயிரத்து, 100 புத்தகங்களும், சமூக
அறிவியல், 25 ஆயிரத்து, 400 புத்தங்களும் வரப் பெற்றுள்ளன.
ஆங்கில மீடியத்தில் ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய
பாடங்களுக்கு தலா, 1,100 புத்தங்கள் வரப்பெற்றுள்ளது. ப்ளஸ் 2 வகுப்புக்கு,
24 ஆயிரத்து, 800 தமிழ் புத்தகமும், 12 ஆயிரத்து, 500 கணித புத்தகமும், 12
ஆயிரத்து, 700 இயற்பியல் புத்தகமும், 6,900 பயோ பாட்டனி புத்தகமும், 6,900
இந்திய பொருளாதாரம் புத்தகமும், 700 தாவரவியல் புத்தகமும், 13 ஆயிரத்து,
200 வணிகவியலில் புத்தகமும், 13 ஆயிரத்து 100 கணக்குப்பதிவியல் புத்தகமும்,
1,200 பயோ மேக்ஸ் புத்தகமும், 13 ஆயிரத்து 200 கம்ப்யூட்டர் சைன்ஸ்
புத்தகமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ப்ளஸ் 2 ஆங்கில மீடியத்தில், மொழிப்பாடம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), 24
ஆயிரத்து 800 புத்தகமும், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் தலா
1,100 புத்தகங்களும், 700 பயோ ஜூவாலஜி புத்தகமும், தலா, 1200 இந்திய
பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் புத்தகங்களும், 1,300
கம்ப்யூட்டர் சைன்ஸ் புத்தகமும் வரப்பெற்றுள்ளது.
கல்வி மாவட்ட அளவில் பெறப்பட்ட இந்த புத்தகங்கள், பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...