மாணவியர், பாலியல் தொந்தரவுக்கு ஆளானால், உடனடியாக புகார் செய்வதற்கு
வசதியாக, "சைல்டு ஹெல்ப் லைன்" என்ற தொண்டு நிறுவனம் சார்பில், கட்டணமில்லா
தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவியர், தங்களுக்கு ஏதாவது பிரச்னை எனில், 1098 என்ற எண்ணில்
தொடர்புகொண்டு, புகார் அளிக்கலாம். அந்த புகார், உடனடியாக, போலீசாருக்கு
தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து, மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளஸ் 1
புத்தகங்களின் பின்பக்க அட்டையில், "சைல்டு ஹெல்ப் லைன்&' திட்டம்
குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...