தமிழகத்தில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு 15ம்
தேதி முதல் ஆரம்பமாகிறது. இப்பணியில் ஈடுபட பட்டதாரிகள், மாணவர்கள்,
ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் பொருளாதார கணக்கெடுப்பு 1977ம் ஆண்டிலும், 5வது கணக்கெடுப்பு 2005ம் ஆண்டிலும் நடந்தது. தற்போது 15ம் தேதி முதல் வரும் ஜூலை மாதம் 15ம் தேதி வரை 6வது பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்கெடுப்பதே இக்கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும். அனைத்து துறைகளிலும் பொருள் உற்பத்தி, பொருட்களின் பகிர்ந்தளிப்பு, சேவை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.
இந்த கணக்கெடுப்பு பணிக்கு
மாநில அளவில் தலைமை செயலாளர் முதன்மை கணக்கெடுப்பு ஆணையராகவும், மாவட்ட
அளவில் கலெக்டர் துணை கணக்கெடுப்பு ஆணையராகவும், மாவட்ட புள்ளியியல் துணை
இயக்குனர் உதவி கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் அமைப்பாளராகவும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையரும்,
நகராட்சி பகுதிகளில் ஆணையர்கள், டவுன் பஞ்., பகுதிகளில் தாசில்தார்களாகவும்
பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து நிலைகளிலும்
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களுடன்
இணைந்து செயல்படுவர். ஒவ்வொரு பொறுப்பு அலுவலர்களுக்கு" 4 ஆயிரம் ரூபாய்
மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.கணக்கெடுப்பு பணியில் 3 கணக்கெடுப்பு
பகுதிக்கு ஒருவரும், இரண்டு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளரும்
நியமனம் செய்யப்படுகின்றனர்.
கிராமப்புற கணக்கெடுப்பு பகுதி ஒன்றுக்கு
1,500 ரூபாய், நகர்ப்புற கணக்கெடுப்பு பகுதி ஒன்றுக்கு 2,100 ரூபாய்,
மேற்பார்வையாளர்களுக்கு 6 கணக்கெடுப்பு பகுதிக்கு 2,200 ரூபாய்
மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.பட்டதாரிகள், விருப்பமுள்ள ஆசிரியர்கள்,
கல்லூரி மாணவர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இப்பணியில்
ஈடுபடுகின்றனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நிறுவனங்களின்
கணக்கெடுப்பு வராததால் உரிய விபரங்களை சம்பந்தபட்டவர்கள் தெரிவிக்கலாம்
எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...