தமிழகம் முழுவதும் 5,340 முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்களில்
மாவட்டங்களுக்குள் 1,496 பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு
600-க்கும் மேற்பட்டவர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
தேதி பின்னர் அறிவிக்கப்படும்: உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கலந்தாய்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவற்றுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தக் கலந்தாய்வுகளுக்கான தேதி நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த ஆண்டு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...