ஆந்திராவில் 10 மாணவர்களுக்கும் குறைவாக
படிக்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை
செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சித்தூரில் உள்ள பிசிஆர் பள்ளி வளாகத்தில்
ஆந்திர மாநில அரசு ஆசிரியர் சங்க மாநில செயலாளர் கோவிந்தய்யா தலைமையில்
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் கோவிந்தய்யா
பேசியதாவது:மாநிலம் முழுவதும் 10 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும்
தொடக்க, நடுநிலை பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநிலம்
முழுவதும் சுமார் 1500 பள்ளிகள் மூடப்பட உள்ளன. சித்தூர் மாவட்டத்தில்
300க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி
உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாது. மாணவர்கள் பல கிலோ மீட்டர்
தூரம் வரை சென்று படிக்க வேண்டி வரும். ஆசிரியர்களும் இடமாற்றம்
செய்யப்பட்டு, மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டிவரும். எனவே, உடனடியாக
இதற்கு பதிலாக மாற்று திட்டத்தை அரசு ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர்
பேசினார்.இதில், நிர்வாகிகள் செங்கல்ராய மந்தடி, கங்காதரம், பாஸ்கர்
ரெட்டி, நவீன்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...