Half Yearly Exam 2024
Latest Updates
5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை
தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டு அங்கன் -வாடிகளில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி - 2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.31.05.2013ன் படி
2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல், 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின்
ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை 31.05.2013
மாலைக்குள் இமெயில் மூலம் அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Proceedings
SSLC துணைத் தேர்வெழுத Online மூலம் 03.06.2013 முதல் 05.06.2013 விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் : ஒரு பாடத்திற்கு ரூ.125/-, தேர்வுகள் 24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும்
SSLC மதிப்பெண் மறுகூட்டலுக்கு Online முறையில் 07.06.13 முதல் 10.06.13 வரை விண்ணபிக்கலாம், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ரூ.305/- மற்ற பாடங்களுக்கு ரூ.205/- கட்டணம் நிர்ணயம்
Click Here 4 Download Instructions
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 9 பேர் முதலிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று
காலை வெளியிடப்பட்டது.
இதில் 498 மதிப்பெண்கள் பெற்று 9 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 497
மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை 52 பேர் பெற்றுள்ளனர்.496
மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை 137 பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ்கள்
வரும் 20-ம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சதமடித்தவர்கள்: கணிதம்:29,905
சமூக அறிவியல்:19,680
பத்தாம் வகுப்பு, தேர்வு முடிவு: மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்
இன்று வெளியாகும் பத்தாம் வகுப்புதேர்வு
முடிவையொட்டி, 32 மாவட்டங்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள்
அனுப்பப்பட்டுள்ளனர். தனியார் வெப்சைட்கள் இல்லாமல்,தேர்வுத் துறை இணைய
தளங்கள் மற்றும் நூலகங்களில் உள்ள இணைய தளங்கள் மூலமாக,தேர்வு முடிவுகள்
வெளியிடப்படுகின்றன.
ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஏன் மாணவர்கள் பள்ளியில் சேர்வதில்லை.
செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31ம் தேதி வெளியீடு
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை (31ம் தேதி), காலை, 9.15
மணிக்கு வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை
பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது.
சிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு 7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது;–
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள
சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி
இடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில்
பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில
பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
பொது மாறுதல் கலந்தாய்வு - ADW
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் 30.05.2013 காலை 10.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது
பள்ளிக்கல்வித் துறை - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013
அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான
பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்
அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி
விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது
01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம்
2013 - 14 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறை - மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/இடைநிலை ஆசிரியர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி /ஆசிரியர் பயிற்றுநர் /இடைநிலை
ஆசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013
முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட
பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
2011-12ம் கல்வியாண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை
ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை
பெற்றவர்கள் 3.6.2013 அன்று பணியில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
தற்போது அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து 10.6.2013 அன்று
திறக்கப்பட உள்ளதால் மேற்கண்டவாறு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள
அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என
பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்
தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.
முதுகலை ஆசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு: மே 31 முதல் விண்ணப்பம்
முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி; 700 ஆசிரியர்கள் புறக்கணிப்பு
சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லூரி மையங்களில், விடைத்தாள் திருத்தும்
பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறைக்கு, 700 ஆசிரியர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.
சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வை 2013ல் எழுதி தேறிய மாணவ-மாணவிகள்
சென்னை மண்டல விபரம் - 2013
தேர்வெழுதியோர் விபரம்
ஒட்டுமொத்தமாக தேர்வெழுதியோர் - 77,616
மாணவர்கள் - 42,253
மாணவிகள் - 35,363
மாணவர்கள் - 42,253
மாணவிகள் - 35,363
தேர்ச்சி அடைந்தோர் விபரம்
மொத்தம் - 71,271
மாணவர்கள் - 38,057
மாணவிகள் - 33,214
மாணவர்கள் - 38,057
மாணவிகள் - 33,214
சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு - சென்னை மண்டல தேர்ச்சி விகிதம் - 2013
சமீபத்தில் வெளியிடப்பட்ட சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில்,
சென்னை மண்டலம் முதலிடம் பெற்றது. கடந்த 2012ம் ஆண்டும், சென்னை மண்டலமே
முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
எந்த சி.பி.எஸ்.சி., மண்டலம் எந்த இடத்தில்?
இந்தியாவில் மொத்தம் 8 சி.பி.எஸ்.இ., வாரியங்கள் உள்ளன. ராஜஸ்தான்
மாநிலத்திலுள்ள ஆஜ்மீர், ஹரியானா மாநிலத்திலுள்ள பஞ்ச்குலா, டெல்லி, அசாம்
மாநிலத்தின் குவஹாத்தி, சென்னை, உத்திரபிரதேசத்தின் அலகாபாத், ஒடிசாவின்
புபனேஷ்வர் மற்றும் பீகாரின் பாட்னா ஆகியவையே அந்த மண்டலங்கள்.
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், மாவட்ட அளவில்,
அதிக மதிப்பெண்கள் பெறும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ,
மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் அமைவிடம்: கூட்டத்தில் வலியுறுத்தல்
"மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் இடவசதி அமைவிடம் குறித்து
தமிழக அரசு வரையறை செய்ய வேண்டும்" என மதுரையில் நேற்று நடந்த தென் மாவட்ட
தனியார் பள்ளிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பேச்சு மற்றும் உச்சரிப்பு பயிற்சியாளர்
இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ள பி.பி.ஓ., துறையானது பேச்சு
மற்றும் உச்சரிப்புப் பயிற்சியாளர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளை வழங்கி
வருகிறது. திறமைமிக்க தகவல் தொடர்பாளர்கள் இளம் பி.பி.ஓ., துறையினரோடு,
திறமையை பகிர்ந்து கொண்டால் நல்ல வருமானம் ஈட்டலாம்.
அருங்காட்சியகங்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு: மத்திய அமைச்சர் ஆலோசனை
"கற்றுக் கொள்ளும் இடமாக மட்டும் இல்லாமல், பார்வையாளர்கள் கவலைகளை
மறந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும் இடமாகவும், அருங்காட்சியகங்கள் இருக்க
வேண்டும்," என, மத்திய கலாச்சார அமைச்சர் சந்தரேஷ் குமாரி கடோச்
தெரிவித்தார்.
பொறியியல், மேலாண்மை பட்டதாரிகளுக்கு நல்ல பணி வாய்ப்புகள்
உலகெங்கிலுமுள்ள பல பணியாளர்கள், ஒவ்வொரு மாதமும், தாங்கள் பெறுகின்ற
ஊதிய காசோலைகளின் மீது எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள் என்பது இயல்பே.
ஆனால், அமெரிக்காவிலுள்ள அஈக ஐணஞி என்ற நிறுவனம்தான், இதுபோன்ற ஊதிய காசோலை
தொடர்பான செயல்பாடுகளுக்கு பொறுப்பான நிறுவனம் என்ற உண்மை பலருக்கும்
தெரியாது.
அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு: ஜூன் 17ல் துவக்கம்
கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 17ம் தேதி துவங்க உள்ளது.
அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் 2013-14 ம் கல்வி
ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 3ம் தேதி முதல் நடக்கிறது. இப்பள்ளியில்
குரலிசை, நாதசுவரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின்
ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு பதிவுக்கு காரைக்காலில் சிறப்பு ஏற்பாடு
காரைக்காலில் பிளஸ் 2 மதிப்பெண்கள் சான்றிதழ்கள், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத் ஐ.ஐ.டி.,க்கு ஜப்பான் கடன் உதவி
ஐதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி.,க்கு ஜப்பான் ரூ.870 கோடி கடனாக வழங்க உள்ளது.
இந்த கடன், ஐ.ஐ.டி.,யின் வளர்ச்சிக்காக ஜப்பானிடம்
இருந்து பெறப்பட்ட அதிகப்படியான கடன் தொகையாகும். இதனால் மாநிலத்தில்
கல்வியை மேம்படுத்த இத்தொகை உதவிகரமாக இருக்கும் என்று வல்லுனர்கள்
தெரிவிக்கின்றனர்.
வேளாண் பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி
வேளாண்மை பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபற்றி அரியலூர் கலெக்டர் ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:
அரியலூர் மாவட்டத்தில் 1,06,409 ஹெக்டேர்
சாகுபடி பரப்பளவாக உள்ளது. இதில், 67 ஆயிரத்து, 155 ஹெக்டேர் மானாவரி பயிர்
சாகுபடி பரப்பளவாகவும், 39 ஆயிரத்து, 254 ஹெக்டேர் இறவை சாகுபடி
பரப்பளவாகவும் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சி.பி.எஸ்.இ.,10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் காணலாம்.
ஜப்பானிய தமிழ் அறிஞருக்கு பத்மஸ்ரீ விருது
ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், சர்தேச தமிழ்
ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர், நொபொரு கராஷிமாவுக்கு, பத்ம ஸ்ரீ
விருது வழங்கி கவுரவித்தார்.
காதுகேளாத குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்? ஆய்வில் தகவல்
தமிழகத்தில், 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு செவித்திறன் குறைபாடு
உள்ளது. இது, தேசிய அளவைவிட, மூன்று மடங்கு அதிகம் என, ஆய்வு மூலம் தெரிய
வந்துள்ளது.
செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க உத்தரவு
இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வு எழுத உள்ளோர், செய்முறை
பயிற்சிக்கு, பதிவு செய்து கொள்ள, அரசு தேர்வுகள் இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளியில் படித்து, அதிக
மதிப்பெண் பெற்ற, 200 மாணவர்களுக்கு, தலா, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு
வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருத்துவ சீட்டுக்கு ரூ.30 லட்சம்: மோசடி செய்த இருவர் கைது
மருத்துவப் படிப்பிற்கு, சீட் வாங்கித் தருவதாக, 30 லட்சம் ரூபாய்
பெற்று, மோசடி செய்த இருவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் 27ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
பிளஸ் 1 துணை தேர்வு ஜூன் 5ம் தேதி ஆரம்பம்
நெல்லை மாவட்டத்தில் மூன்று மையங்களில் பிளஸ் 1 துணை தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகிறது.
தேவைதானா ஆசிரியர் தகுதித் தேர்வு? - முனைவர் மணி.கணேசன்
மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபால
கிருஷ்ண கோகலே 1910-ஆம் ஆண்டிலேயே இலவச கட்டாயக் கல்விக்காகக் கொடுத்த
குரல் பல்வேறு படிநிலைகளைக் கடந்து அண்மையில்தான் மத்திய அரசால் இலவசக்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 என ஜம்மு-காஷ்மீர் தவிர நாடு முழுவதும்
ஏப்ரல்1, 2010 முதல் நடைமுறைப்படுத்தப் பெற்றுள்ளது.
வாட்டி வதைக்கும் கோடை வெயில்... ஜூன் 10ம் தேதி தான் பள்ளிகள் திறப்பு : தமிழக கல்வித் துறை அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறையை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 3ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் கடுமை தொடர்வதால் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
கற்பது கற்கண்டா? கசப்பா?byஉதயசங்கர்
கற்றலின் இனிமை என்ற செயல்முறைக்கல்விமுறைக்கு முன்னோடி கிஜூபாய் பகேக. இன்றும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இந்த முறை உவப்பானதாகத் தெரியவில்லை.
அரசாணை எண்.216 நடைமுறைப்படுத்த - விரைவில் உரிய அரசாணை
அரசாணை எண்.216 நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை, விரைவில் உரிய அரசாணை வெளியிடப்பட உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் திரு.முத்துசாமி அவர்கள் தகவல்
அண்ணாபல்கலைக்கழகத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கட் ஆப்
சி.பி.எஸ்.இ. 12–வது படித்த மாணவர்கள்
என்ஜினீயரிங் படிப்பில் பி.இ. அல்லது பி.டெக். சேர அண்ணாபல்கலைக்கழகத்தில்
விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக கல்லூரிகளில் உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் 27ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
ஆசிரியர் பயிற்சி படிப்பு: விண்ணப்ப வினியோகம் துவக்கம்
ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் 27ம்
தேதி துவங்கியது. ஜூன், 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
"வேலை தேடாதீர்... வேலை தருவோராக மாறுங்கள்..."
"பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பை தேடாமல், வேலைவாய்ப்பு தரும்
தொழில்முனைவோராக மாற வேண்டும். முன்னதாக, அதற்கான தகுதியை உருவாக்கிக்
கொள்ள வேண்டும்" என்று அண்ணா பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு)காளிராஜ்
பேசினார்.
"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆண்டு
தோறும் "பிளக்ஸ் பேனர்" வைத்து, மாணவர்களை அழைக்கிறது, அரசூரில் உள்ள
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
தலைமை ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் பதவி உயர்வு
கவுன்சிலிங் இன்று துவங்குவதாக, திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்
(பொ) ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
"விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்"
"இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும்" என அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தர் ராஜாராம் கூறினார்.
ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்
"ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு, ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை மட்டுமே
கொண்டுள்ளது; அந்த அமைப்பிடம், எம்.பி.ஏ., கல்லூரிகள் அனுமதி பெறத்
தேவையில்லை" என சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், அதிகாரம்
இழந்துள்ள அந்த அமைப்புக்கு, அதிகாரத்தை மீட்டுக் கொடுப்பதற்காக, அவசர
சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுகோள்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை போல, பச்சையப்பன் அறக்கட்டளையையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு: சென்னை மண்டலம் முதலிடம்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 27ம் தேதி வெளியாயின. இந்தியா
முழுவதும், 82 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சென்னை
மண்டலம் முதல் இடம் பிடித்துள்ளது.
தகவல் தர மறுத்ததால் கிடுக்கிப்பிடி: மதுரை பல்கலைக்கு அபராதம்
ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான, ஆவணங்கள் வழங்க மறுத்த, மதுரை காமராஜ்
பல்கலைகழகத்திற்கு, மாநில தகவல் ஆணையம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம்
விதித்துள்ளது.
புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு
வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் ஜுன்
3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி
அமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை துவக்கம்
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 28) தொடங்குகிறது.
ஊதிய நிர்ணயக் குளறுபடி - பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் ஓர் ஒப்பாய்வு
M.A/M.Sc., B.Ed., முடித்துவிட்டு ஒருவர்
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான TET தேர்வு, முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களுக்கான TRB தேர்வு ஆகிய இரண்டிலுமே தேர்ச்சி பெற்றால் அவர்
பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்வதே சிறந்தது.
பள்ளிக்கல்வி துறைக்கு மாறிய 4000 பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு கனவு பலிக்குமா?
தமிழகம் முழுவதும், தொடக்கக் கல்வித்துறையில்
இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு மாறுதலில் (யூனிட் டிரான்ஸ்பர்) சென்ற
4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை
இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.
கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுத கூடாது என்று உத்தரவு வந்ததா? கல்லூரி கல்வி இயக்குனர் விளக்கம்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள்
தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்
என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி
இயக்குனரகத்திற்கு வரவில்லை என்று கல்லூரி கல்வி இயக்குனர்
பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
"சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசு பள்ளிகளில் பிளஸ்,1ல் சேர்க்க வேண்டியதில்லை" - கேரள உயர்நீதிமன்றம்
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு வரை
சிபிஎஸ்இ வாரியமே நேரடியாக தேர்வு நடத்தி வந்தது. 2009ம் ஆண்டு முதல்
சிபிஎஸ்இ.யில் படிக்கும் மாணவர்கள் பள்ளி அளவிலும், வாரியம் அளவிலும்
தேர்வு எழுதினர்.
School Education BT Assts/BRTE/PET/Spl Trs - Transfer Counseling Schedule Now Announced.
2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013 அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
28.5.13 - பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ( மாவட்டத்திற்குள் )
29.5.13 - பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ( மாவட்டம் விட்டு மாவட்டம் )
Department Exam - EO & Account Test Materials
- Account Test & EO - Important Pages From 6 Books
- Account Test & EO - Model Sums
- Account Test & EO - Full Points
- Account Test & EO - Short Hints
- Account Test & EO - Detail Hints
- Account Test & EO - Materials - 2
- Account Test & EO - Materials - 1
- Account Test & EO - Exercise Materials
- Account Test & EO - Exercise Materials
- சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர் , விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களிலும் துறை தேர்வுக்கு பயிற்சி அளித்து வந்த மறைந்த திருவண்ணாமலை திரு. சோம சுந்தரம் ஐயா அவர்களின் நினைவாக அவரின் மனைவி திருமதி. வனஜா அவர்கள் நமது பாடசாலை வலைதளத்திற்காக இலவசமாக பல்வேறு துறைதேர்வு Study Materials வழங்கியுள்ளார். ஐயாவுக்கும், அவரது மனைவிக்கும் நாம் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
- இந்த தலைப்பில் மேலும் பல புதிய பதிவுகளை பார்வையிட www.TrbTnpsc.com - எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
Department Exam - DI Paper 1 & 2 & Statistics
DI Paper 1
DI Paper 2
DI Paper 1 & 2 ( Combined )
இந்த தலைப்பில் மேலும் பல புதிய பதிவுகளை பார்வையிட www.TrbTnpsc.com - எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு: ஆண், பெண் சம விகிதத்தில் தேர்ச்சி
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு
முடிவுகள் நேற்று வெளியானது. சென்னை மண்டலத்தில், ஆண்கள், 99.85 சதவீதமும்,
பெண்கள் 99.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.
ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: படிக்கட்டு பயணம் தடுக்கப்படுமா?
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான
நிலையில் பயணிக்கும், மாணவர்களை தடுத்து நிறுத்த, சம்பந்தப்பட்ட துறையினர்
நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு
மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில்,
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில்
மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று வழங்கல்
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று முதல், அந்தந்த பள்ளிகளில்
வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், கடந்த
மார்ச் 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம்
தேதி வெளியிடப்பட்டது.
ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும்,
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் முதல்
நிலைதேர்வு, நேற்று நடந்தது. இத்தேர்வை, தமிழகத்தில் இருந்து, 30 ஆயிரம்
பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 40 சதவீதம்பேர், ஆப்சென்ட் ஆயினர்.
தமிழக தொடக்க நடுநிலைப்பள்ளிகள் கோடை விடுமுறைக்குபின் பள்ளி த்திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு - ராஜ் நியூஸ் செய்திகள்
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன்_3 ல் திறக்க தொடக்கக்கல்வி இயக்கம் ஏற்கனவே உத்திர விட்ட நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் பல ஊர்களில் 110*F தாண்டியது.
ஜப்பானில் உதவித்தொகையுடன் படிப்பு
ஜப்பானில் உள்ள கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப அமைச்சகம், ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி,
தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைகள் (இளநிலை படிப்பு) போன்றவற்றில் சேர
விரும்பும், சர்வதேச மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட
மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி
கல்வித் துறை அறிவித்துள்ளது.