கல்வித்துறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையில், கல்வியோடு
சேர்த்து மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு
தலைப்புகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில் பழங்கால நாணயங்களை
சேகரிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு கூடுதல்
மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில்,
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில், கற்றல் கற்பித்தல்
நடைபெறும் போதே, கல்விசார் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில், கற்போரை
தொடர்ந்து மதிப்பீடு செய்வதாகும். இதில் மாணவர்கள் தனித்திறமையையும்
வளர்த்து கொள்வதற்காக, செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
பல்வேறு தலைப்புகளின் கீழ், மாணவர்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தலாம்.
குறிப்பாக வாழ்க்கை திறன், மன பான்மைகளும் மதிப்புகளும், நன்னலம் மற்றும்
யோகா, உடற்பயிற்சி, நாணயங்கள் சேகரித்தல் போன்றவற்றின் மீதும், தனிக்கவனம்
செலுத்த வைக்கின்றனர்.
விடுமுறை நாட்களில் மாணவர்கள் பயனுள்ளதாகவும் அறிவு சார்ந்ததாகவும்
மாற்றி கொள்வதற்காக பழங்கால நாணயங்கள், ஸ்டாம்ப்கள், ரூபாய் நோட்டுகள்
சேகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. இதுபோல் செயல்முறை
பயிற்சியில் மாணவர்களுக்கு 40 சதவீத மதிப்பெண் வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...