சிதம்பரம் காமராஜ் கல்வியியல் கல்லூரியில்
தமிழக அரசு பொதுத் தேர்வுகளில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் என்ற
தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாணவி வி.ரம்யா வரவேற்றார். அண்ணாமலைப்
பல்கலைக்கழக கல்வித்துறைப் பேராசிரியர் ஆர்.முத்துமாணிக்கம் கருத்தரங்கைத்
தொடங்கி வைத்துப் பேசினார்.
கல்லூரித் தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் கருத்தரங்கின் பொருள் குறித்துப் பேசினார். ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆர்.ரவிசங்கர், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் ஜி.ராஜன், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் டி.சந்திரசேகரன், கொள்ளிடம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் டி.வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.
கல்வித்துறைப் பேராசிரியர் பி.மின்னல்கொடி நிறைவுரையாற்றினார். மாணவி எஸ்.ஐஸ்வர்யலட்சுமி நன்றி கூறினார். துணை முதல்வர் ஜி.ஷீலா, காமராஜ் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மீனாட்சி, சக்தி, டி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மின்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு தேர்வு மையங்களில் ஜெனரேட்டரை அரசு வழங்க வேண்டும். தேர்வு நாள்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.
பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குவதால், ஏப்ரல் இறுதி வாரத்தில் முற்பகலில் 12-ம் வகுப்பு தேர்வும், பிற்பகலில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்தப்பட வேண்டும்.
75 மாணவர்களுக்கு ஒரு தேர்வு மையம் என்ற அடிப்படையில் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுக்கு பின்னரே செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும்.
11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் அரசு தேர்வுகள் நடத்தி, 11-ம் வகுப்பில் பாதிப் பாடங்களும், 12-ம் வகுப்பில் மீதிப் பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்துவதும், குறிப்பாக மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் 11-ம் வகுப்பிலேயே முடித்துக் கொள்வதும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.
எனவே செமஸ்டர் முறையை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...