"பாரம்பரிய மருத்துவத்தை கற்றுக்கொள்ள பார்மசி மாணவர்கள் முன்வர வேண்டும்" என, கல்லூரி விழாவில் அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரியில், கல்லூரி நாள் விழா நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இந்திய அணுசக்தி கழக முன்னாள்
தலைவர் டாக்டர் சீனிவாசன் பேசுகையில், "மருந்தாக்கியல் துறையில் பல புதிய
கண்டுபிடிப்புகள் தொடர்கின்றன; இது வரவேற்கதக்கது. எய்ட்ஸ் போன்ற உயிர்
கொல்லி நோய்களுக்கு மருந்தே இல்லை, என்ற நிலை மாறி, அந்நோய்களை
கட்டுப்படுத்த மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சீனா போன்ற நாடுகளில்,
பாரம்பரிய மருத்துவத்தை, மருந்தாக்கியல் துறை மாணவ, மாணவியர்
பயில்கின்றனர்.
ஆனால், இந்தியாவில் இத்தகைய நிலை இல்லை. இந்தியாவில், ஆயுர்வேதம்,
யுனானி, சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவத்தை மாணவ, மாணவியர் படிக்க
வேண்டும்,&'&' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...