"கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி, நாட்டின்
வளர்ச்சிக்கான முதலீடு ஆகும்," என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர்,
பல்லம் ராஜூ பேசினார்.
மக்கள் தொகையில், அதிகமானோர் கிராமங்களில் வசிக்கின்றனர்.
இவர்களில், 65 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். தற்போது, விவசாய
பரப்பு மிகவும் சுருங்கி வருவது கவலையளிக்கிறது. விவசாயத்தை பாதுகாப்பதன்
மூலம் தான், நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய முடியும். இதற்கு கிராம
பொருளாதாரம் வலுவாக இருக்க வேண்டியது அவசியம்.
கிராமம் மற்றும் கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு, அதிக
விழிப்புணர்வு தரப்பட வேண்டும். கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி,
நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு ஆகும். இவ்வாறு, பல்லம் ராஜூ பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...