Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி


          "அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக் இன்டையர் தெரிவித்தார்.


           கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் நிறுவனர் நாள் விழா முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,ராமசுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

           விழாவில் சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனீபர் மெக் இன்டையர் பேசியதாவது: 2009ல் ஓ.எஸ்.ஐ., ஒப்பந்தப்படி இரு நாடுகளும் எல்லா துறைகளிலும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறது. அதன் அடிப்படையில், எனர்ஜி, சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல், கல்வி, பொது சுகாதாரம் மற்றும் புதிய கண்டு பிடிப்புகளுக்காக ஐந்து மில்லியன் டாலர் அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக எட்டு உதவிகள் வழங்கப்பட்டன. அதில் தென் இந்தியாவிற்கு மூன்று உதவிகள் கிடைத்துள்ளன. நடப்பாண்டில் அதற்கான அறிவிப்பு வெளியானதும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

          தற்போது அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்தியர்கள் படிக்கின்றனர். அமெரிக்காவில் இருந்தும் ஏராளமானோர் இந்தியாவிற்கு படிக்க வந்துள்ளனர். கல்வி என்பது பல்கலைக்கழக படிப்பு மட்டுமில்லை. வாழ்நாள் முழுவதும் உள்ள வளர்ச்சி என்பதை உணர வேண்டும். தற்போது ஓரு லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். அமெரிக்காவிற்கு ஆண்டிற்கு ஐந்து கோடி பேர் சுற்றுலா பயணிகளாகவும், பல்வேறு பணிகளுக்காகவும் செல்கின்றனர். அதே போல் ஆண்டுக்கு எட்டு லட்சம் அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளாக வருகின்றனர்.

             இது போன்ற கல்வி மற்றும் பொழுது போக்கு பயணத்தால் அறிவும், அனுபவமும் அதிகரிக்கும். உலக அளவில் அனைத்து நாடுகளிலும் நல்ல உறவை ஏற்படுத்தியுள்ள இந்தியா, அனைத்து துறைகளிலும் எழுச்சி பெற்று மிகச்சிறந்த நாடாக மிளிர வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்களிடத்தில் உள்ளது, என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive