சராசரி மதிப்பெண் பெறுபவர்களே, சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுகின்றனர் என, கல்வியாளர் ரமேஷ் பிரபா கூறினார்.
சென்னையில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதலிடம் பெற்று, செய்தித்தாள்களில் இடம் பெறும் மாணவர்கள் அனைவரும், முன்னேறியவர்கள் பட்டியலில் இடம் பெறுவதில்லை. மாறாக, படிப்பை கைவிட்டவர்கள், சராசரியாக படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
மேற்படிப்பை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள்,
எந்தெந்த துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, கல்லூரியின் தரம் குறித்து
விரிவாக அறிந்த பின்னரே, படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தைகளின்
மேற்படிப்பை தேர்ந்தெடுக்கும் பெற்றோர், அவர்களுடன் கலந்தாலோசித்து
முடிவெடுக்க வேண்டும். தங்களின் கருத்துகளை குழந்தைகள் மீது திணிக்கக்
கூடாது.
சமீப காலமாக, பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும்
இடைவெளி அதிகரித்து வருகிறது. மற்றவர்களுக்காக மேற்படிப்பை
தேர்ந்தெடுக்கும் முறையை, மாணவர்கள் கைவிட வேண்டும். மருத்துவம், பொறியியல்
தவிர, மாணவர்களின் எதிர் காலத்தை வளமையாக்க, ஏராளமான படிப்புகள் உள்ளன.
ஆடை வடிவமைப்பு, வேளாண்மை, ஓவியம், இசை,
கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட், சி.ஏ., - ஐ.சி.டபுள்யூ.ஏ., -
ஏ.சி.எஸ்., ஊடக துறை உள்ளிட்ட, வேலைவாய்ப்புகளை அள்ளி தரும் படிப்புகளும்
உள்ளன. எதிர் கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, துறை சார்ந்த படிப்புகளை
தேர்ந்தெடுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...