"டி.இ.டி., தேர்வில், பி.சி., - எம்.பி.சி., -
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, மதிப்பெண் சலுகை வழங்க
வேண்டும்" என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இந்த அமைப்பின்
சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம்
நடத்தினர். டி.இ.டி., தேர்வுகளில், எஸ்.சி, - எஸ்.டி., பிரிவு சமுதாயத்தில்
இருந்து தேர்வு பெறுபவர்கள் எண்ணிக்கை, மிகவும் குறைவாக இருப்பதையும், பல
மாநிலங்களில், இந்த பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை வழங்குவதை சுட்டிக்
காட்டியும், தமிழகத்திலும், மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என, அந்த
அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இந்த சலுகையை, மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீட்டை, முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ஆசிரியர் தேர்வில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் பங்கு உயர வேண்டும் என்ற நோக்கத்தில், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் என்ற, அமைப்பை உருவாக்கி, அதன் சார்பில், மேற்கண்ட சமுதாயத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, சென்னையில் இலவச பயிற்சியை நடத்தி வருகின்றனர்.

The high court has confirmed that There is no quota reservation in The tet exams since The RTI act requires Really good quality of education. They need to be encouraged very well and given good practice and study materials by The government of tamilnadu. They should show mercy to them.
ReplyDeletehello mrrrrr.balu
ReplyDeletethe how the othr states done it??????????