அருங்காட்சியகங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக,
அமைக்கப்படும் நடமாடும் அருங்காட்சியகம், அடுத்த மாதத்திலிருந்து செயல்படத்
துவங்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க, 20
இடங்களில், அருங்காட்சியகங்கள் உள்ளன. இவற்றில், மானுடவியல், விலங்கியல்,
தாவரவியல், புவியியல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகள் உள்ளன. நம் நாட்டின்
அரிய பொக்கிஷங்கள், இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரிய தபால் தலைகள்,
காசுகள், பட்டயங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கூட,
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அருங்காட்சியகங்கள் துறை, "நடமாடும் அருங்காட்சியகம்' அமைக்க முடிவு செய்துள்ளது. பஸ்சின் உள் பகுதியை, காட்சிக் கூடமாக்கி, பஸ்சின் இரண்டு புறங்களிலும், காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்கள் குறித்த அறிவிப்பு வைக்கப்படும்.
பின், அருங்காட்சியகத்தின், பல்வேறு துறைகளில் உள்ள முக்கியமான பொருட்கள், காட்சிக்கு வைக்கப்படும். ஒரே நேரத்தில், 50க்கும் மேற்பட்டோர், பார்வையிடும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
அடுத்த மாத மாத இறுதியில், நடமாடும் அருங்காட்சியகம் செயல்படும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் அருங்காட்சியகம், தமிழகம் முழுக்க வலம் வரும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று, அங்குள்ளவர்களிடம், அருங்காட்சியகம் குறித்தும், பாரம்பரியத்தின் மதிப்பு குறித்தும், அந்தந்த பகுதியில் உள்ள, காப்பாட்சியர்கள் விளக்குவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...