"கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலித்தால்,
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்
எச்சரித்துள்ளார்.
உயர்கல்வி மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நடந்த விவாதம்:
தே.மு.தி.க. பார்த்திபன்: கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில், மாணவர்களைச் சேர்க்க பெரும் தொகை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. இதை தட்டிக் கேட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில், கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது. இதனால், நன்கொடை வசூலிப்பது குறித்து, வெளியில் சொல்ல முடியாமல், மாணவர்களும், பெற்றோரும் தவிக்கின்றனர்.
உயர் கல்வித்துறை அமைச்சர்: கல்லூரிகளில், கட்டாய நன்கொடையை வசூலைத் தடுக்க, 1992ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்தோம். இதன்படி, மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டாய நன்கொடை வசூல் குறித்து, இக்குழுவிடம் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த கல்லூரியில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்பதை, குறிப்பிட்டு சொன்னால், நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக குற்றச்சாட்டுகளை கூறுவதில் பயனில்லை. அரசு அமைத்துள்ள, குழுவுக்கும் இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை.
பார்த்திபன்: அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்துக்கும் கூடுதலாக, தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உயர்கல்வி அமைச்சர்: தனியார் கல்லூரிகளின் கட்டண நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு, கட்டண உயர்வு குறித்து, கல்லூரிகள் மனு செய்கின்றன. குழு, கட்டணத்தை நிர்ணயிக்கிறது. இதில், அரசுக்கு சம்பந்தம் இல்லை.
பார்த்திபன்: பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் துவங்கப்பட்டு, பல ஆண்டுகளாகியும், நிரந்தர ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால், இவ்வசதிகளுக்காக, 100 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இத்தொகை, உறுப்புக் கல்லூரிகளுக்கு போய் சேரவில்லை.
உயர்கல்வி அமைச்சர்: உறுப்புக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை, முதல், ஐந்தாண்டுகள் பல்கலைக் கழகம் வழங்கும். அதன் பின், அரசு ஏற்கும். இதன்படி, ஐந்தாண்டுகள் முடிந்த கல்லூரிகளுக்குத் தேவையான வசதிகளை, அரசு ஏற்படுத்திக் கொடுக்கும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...