சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் வங்கியில் பணம் எடுத்து ரொக்கமாக ஊதியம்
திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
மாதந்தோறும் மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் அரசு கருவூலத்திலிருந்து
வங்கிகள் மூலம் அந்தந்த ஊழியரின் வங்கிக் கணக்குக்கு மாத ஊதியம்
மாற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிதம்பரம் துணைக் கருவூலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சாஃப்ட்வேர் கோளாறினால் மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்ய முடியாமல் போனது.
இதனால் அந்தந்த அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத் தொகையை மொத்தமாக காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த அலுவலக நிர்வாக மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காசோலையை வங்கிக்குக் கொண்டு சென்று பணமாக மாற்றி அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டதால் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்த மாதம் கூடுதல் சுமை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
இனி வரும் காலங்களில் ஊதியம் வழங்கும் மாத இறுதிநாளில் சாஃப்ட்வேர் நல்லமுறையில் செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொண்டு இதுபோன்ற கோளாறுகள் ஏற்படாமல் இருக்க கருவூல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...