அரசு பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்களுக்கு, பட்டா வாங்கும் முயற்சியில்,
மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டா
இல்லாததால், இதுவரை திருப்பி அனுப்பப்பட்ட நிதியை, இதன் மூலம் தக்க வைக்க
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சிலர் தங்கள் நிலத்தை தானமாகவும் பள்ளிக்கு வழங்கியுள்ளனர். இந்த
இடங்களில் கட்டடங்கள் எழுப்பப்பட்டு, பள்ளிகள் செயல்பட துவங்கின.
பள்ளிக்கு, ஊராட்சிக்கு சொந்தமான இடங்களை வழங்குவது தொடர்பாக அப்போது
யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பள்ளி கட்டடங்கள் பழுதடைந்து போனதால், புதிய கட்டடங்கள்
கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம்
திட்டத்திலும், நபார்டு வங்கி திட்டத்திலும், பள்ளிகளுக்கு புதிய
கட்டடங்களை கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, கட்டடங்கள் கட்ட வேண்டிய இடத்திற்கு, பட்டா, சிட்டா
ஆகியவை பள்ளியின் பெயர் அல்லது மாவட்ட கல்வித் துறையினர் பெயரில் இருக்க
வேண்டும். பள்ளிக்கென இடம் இருந்தும் உரிய பட்டா, சிட்டா இல்லை என்றால்,
அந்த பள்ளியில் புதிய கட்டடங்கள் கட்டுவது என்பது சாத்தியமாகாது.
பல பள்ளிகளில் இடம் இருந்தும், அவற்றிற்கான பட்ட, சிட்டா ஆகியவை
பள்ளியின் பெயரிலோ, கல்வித்துறையின் பெயரிலோ இல்லை என்பதால், அப்பள்ளிகளில்
புதிய கட்டடம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சில பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர், லோக்சபா உறுப்பினர்களின்
முயற்சியால், மேற்கண்ட துறைகள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், பட்டா,
சிட்டா இல்லாததால், இந்த நிதி திரும்பி சென்று விடுகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
சாந்தி தலைமையில் முதற்கட்டமாக, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், கடந்த 26ம் தேதி நடந்தது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு கல்வி மாவட்டங்களை சேர்ந்த 148 அரசு
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்,
பள்ளிக்கு என, உள்ள இடத்தின் மொத்தப் பரப்பளவு, பயன்பாட்டில் உள்ள
கட்டடங்கள் எண்ணிக்கை, பழுதடைந்த கட்டடங்கள் எண்ணிக்கை, சுற்றுச் சுவர்
குறித்த விவரம், தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தின் அளவு, பத்திரங்கள் குறித்த
விவரம் ஆகியவை எழுத்து மூலம் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டன.
இதையடுத்து, பள்ளி நிலங்களுக்கு பட்டா வழங்கும் முயற்சி
தீவிரமாக்கப்பட்டுள்ளது. பள்ளி இடங்களுக்கு அவசியம் பட்டா பெற வேண்டும் என,
உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு, பட்டா பெற,
மே மாத கோடை விடுமுறையை தலைமை ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள
வேண்டும்.
இந்த நிலத்திற்கு பட்டா வழங்கப்படலாம் என, ஊராட்சி தலைவர்கள் மூலம்
கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்; அதன் நகலுடன் தாசில்தார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை
சந்திக்க வேண்டும்.
அவர்களிடம் மனுக்களை கொடுத்து, பட்டாக்களை பெறுவதற்கு, சட்ட மற்ற
உறுப்பினர்கள், லோக்சபா உறுப்பினர்களின் சிபாரிசு கடிதங்களையும் அத்துடன்
இணைக்க வேண்டும்; ஜமாபந்தியிலும் அதிகாரிகளை சந்தித்து, பட்ட பெறுவது
குறித்த நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...