வகுப்பறைகள் போர்க்களமாக மாறாமல் இருக்க
வேண்டுமெனில், ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம், என பட்டமளிப்பு விழாவில்,
ஆசிரியர் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
குள்ளப்பகவுண்டன்பட்டி ராமகிருஷ்ணன் சந்திரா
கல்வியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், சென்னை ஆசிரியர் பல்கலை துணை
வேந்தர் விஸ்வநாதன், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
ஆசிரியர்களாக உருவாக உள்ள மாணவிகளை எதிர்நோக்கி பல்வேறு சவால்கள் உள்ளன. சமுதாயத்தில் மதிக்கப்படுகின்ற பொறுப்பு ஆசிரியர்களிடத்தில் உள்ளது. இதை உணர்ந்து தற்போது பட்டம் பெறும் மாணவிகள் செயல்பட வேண்டும். தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேவை அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலை இருந்தாலும், படிக்காதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. அதற்கு காரணம் சில பெற்றோர்கள்தான். இதை மாற்ற கட்டாயக் கல்வியை அமல்படுத்த, ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்" என்றார். திண்டுக்கல் டி.ஐ.ஜி., அறிவுசெல்வம் உட்பட பலர் பேசினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...