"மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்,"
என இஸ்ரோ இந்திய விமானவியல் ஆராய்ச்சி நிறுவன (மிஷன்) இயக்குனர்
சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.
இன்றைய சமுதாயத்தில் மாணவர்கள், முக்கியத்துவம்
வாய்ந்தவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் எதிர்கால தூண்கள். மாணவர்கள்
தங்கள் அறிவியல் திறனை வளர்த்துக் கொண்டால் மிக பெரிய அளவில் சாதனைகள்
படைக்க முடியும். மாணவர்கள் தங்களால் முடிந்தளவுக்கு தங்கள் தனித்திறமை
மற்றும் அறிவியல் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் எதிர்கால வான்வெளி திட்டங்களுக்கு,
மாணவர்களுடைய தொழில் நுட்ப அறிவு மிகவும் அவசியம். மாணவர்கள்
ஆராய்ச்சிகளில் ஈடுபட தேவையான கட்டமைப்பு வசதிகளை கல்லூரிகளும்,
பெற்றோர்களும் தற்போது செய்து கொடுக்கின்றனர். அதனால், மாணவர்கள் வெறும்
வேலைவாய்ப்புக்காக மட்டும் படிக்காமல் அறியவில் பூர்வ ஆராய்ச்சிகளிலும்
ஈடுபட வேண்டும்.
முந்தைய காலங்களில் மிகவும் வசதிப்படைத்தவர்கள் மட்டுமே
விமானவியல், விண்வெளி பயன்களை பெற்றனர். தற்போது, அறிவியல் முன்னேற்றங்கள்
காரணமாக விமானவியல், வான்வெளி பயன்கள் சாதாரண மக்களையும்
சென்றுடைந்துள்ளனர். விண்வெளியில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளதால்,
உலக நாடுகளின் பார்வை நமது நாட்டின் பக்கம் திரும்பியுள்ளது. தொழில்நுட்ப
முன்னேற்றங்களை மணிதன், எழுச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மணித
சமுதாய அழிவுக்கு பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் கற்பனை திறன்,
உருவாக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
விண்வெளி திட்டங்களின் பயன்பாடுகள், உருவாக்கம் குறித்து இஸ்ரோ இயக்குனர் சுந்தரமூர்த்தி, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...