இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு எதிராகவும்,
இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தியும் மாணவர் கூட்டமைப்பினர் மாநிலம்
முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் காலவரையின்றி மூடப்பட்ட
கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.
சென்னை உட்பட தமிழகமெங்கும் அனைத்து பொறியியல்
கல்லூரிகள் திறக்கப்படும் மற்றும் தேர்வுகள் திட்டமிட்ட படி குறிப்பபிட்ட
கால நேரத்தில் நடக்கும் என்று அண்ணா பல்கலைகழக துணைவேந்தர்
அறிவித்துள்ளார்.
தேர்வு திட்டத்தில், எவ்வித மாற்றமும் கிடையாது&' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. ஆனால், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகள், 10 நாள் வரை தள்ளிப் போகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் துவங்க வேண்டிய தேர்வுகள், மாத இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ துவங்கும் என, கூறப்படுகிறது.
கலை அறிவியல் கல்லூரிகளை போலவே, அரசு சட்ட கல்லூரிகளும், மார்ச் 15ம் தேதி முதல், மூடப்பட்டன. கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் இன்று திறக்கப்படும் என, அரசு அறிவிக்கப்பட்ட நிலையில், சட்ட கல்லூரிகள் திறப்பு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இது, சட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...