ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்து நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றிய துவக்கப்
பள்ளிகளுக்கும் முதல் கட்டமாக கழிப்பறை வசதியை செய்து கொடுக்கும் பணி
முடிவுறும் தருவாயில் உள்ளது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் தனியாக
குடிநீர்திட்டம் செயல்படுத்த முடிவு செய்து இதற்கென மாவட்ட வாரியாக
நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஒன்றிய துவக்கப் பள்ளியில் தனியாக போர்வெல் அமைத்தல், குடிநீர் தொட்டி, குழாய்கள் பதித்து குடிநீருக்கு மற்றும் கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஆகியவை செய்துதர பள்ளி வாரியாக மதிப்பீடு செய்யும் பணி நடக்கவுள்ளது.
சில ஊராட்சிகளில் குடிநீர் வசதி போதுமான அளவு இருக்கும்பட்சத்தில் ஊராட்சிகள் மூலம் குடிநீர் குழாய்கள் அமைத்துதரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள் ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு மாவட்ட வாரியாக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
குறைந்தபட்சமாக சிறிய மாவட்டங்களுக்கு ரூபாய் 3 கோடி முதல் அதிகபட்சமாக 5 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டங்களை குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருந்த அரசு, பின் இதை கைவிட்டு தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு துவக்கத்தில் அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் வசதி பெறும் நிலை இத்திட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...