Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணிதம் இனித்தது.



         10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணித தேர்வு இன்று காலை நடந்து முடிந்தது. இதுவரை நடந்து முடிந்த பாடங்களிலேயே இந்த கணித தேர்வு தான் மிக மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.


        1 மதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும் புத்தகத்தின் பின்புறம் பயிற்சியில் உள்ள வினாக்களே கேட்டகப்பட்டிருந்தது.

          2 மதிப்பெண் வினாக்களில் ஒரு சில கடினமாக இருந்தாலும் அவற்றை சாய்சில் தவிர்க்க முடிந்ததால் 2 மதிப்பெண் வினாக்களும் மிக எளிமையாக இருந்தது.

          5 மதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட மிக எளிமையான வினாக்களே கேட்கப்பட்டன. வெண்படம் சார்பான கேள்வி தவிர்க்கப்பட்டது மட்டுமே மாணவர்களுக்கு வருத்தம்.

             இதேபோல் கிராப் மற்றும் ஜாமென்ட்ரியிலும் மாணவர்கள் எதிர்பார்த்த வினாக்கள் இருந்ததாக மாணவர்கள் கூறினர்.

           மொத்தத்தில் சென்ற வருடம் போல் இல்லாமல் இந்த வருடம் கணித தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் எனவும் 100 சதவீதம் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




4 Comments:

  1. Maths not sweet
    you see blue print

    *chapter 3 three five mark kudukanum but Two five mark question kuduthu irukanga
    * chapter 4 only one five tha kudukanum but 2 five mark kuduthu irukanga
    * chapter 7 only one five mark tha kudukanum Two question kuduthu irukanga
    meendum kularu padi

    ReplyDelete
  2. 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு கடினம்: மாணவர்கள் அதிர்ச்சி
    By Venkatesan Sr, சென்னை
    First Published : 06 April 2013 05:51 AM IST
    எஸ்.எஸ்.எல்.சி. கணிதப் பாடத் தேர்வில் கடின வினாக்கள் இடம் பெற்றிருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டைப் போலவே முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கருதப்படுகிறது.
    தமிழகத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. முக்கியப் பாடங்களில் ஒன்றான கணிதத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், தாங்கள் எதிர்பார்த்தபடி வினாத்தாள் அமையாததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் யாவும் கடினமானவையாக இருந்தன. சுயமாக யோசித்து பதிலளிக்கும் விதமாக கேள்விகள் இருந்ததால் அவற்றுக்கு பதிலளிக்க நீண்ட நேரம் ஆனது. இதனால் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவதற்கு நேரம் போதவில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
    பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் வழக்கமாக கேட்கப்படும் வினாக்கள் இல்லாததால் கிராமப்புற மாணவர்கள், சராசரி மாணவர்களுக்குத் தேர்வு கடினமானதாக அமைந்துவிட்டதாக கணித ஆசிரியர்கள் கூறினர். 5 மதிப்பெண் வினாக்களில் வழக்கமாக கேட்கப்படும் கணங்கள், வர்கமூலம், வடிவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறவில்லை. மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்த டிமார்கன் விதி வினாவும் இடம்பெறவில்லை.
    அதற்கு மாறாக எதிர்பாராத வினாக்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. 10 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தன. மொத்தத்தில் இந்த வினாத்தாள் கிராமப்புற மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் கடினமானதாகவே இருக்கும். இதனால் தேர்ச்சி விகிதமும்குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படும் என்றனர் அவர்கள்.
    தொடர்ந்து கசக்கும் கணிதம்: சமச்சீர் பாடத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கணிதத் தேர்வு, மாணவர்களுக்குஅச்சமூட்டும் ஒன்றாகவே இருந்து வருகிறது. முதலில் அறிவிக்கப்பட்ட வினாத் திட்டப்படி ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்களில் சில குறிப்பிட்ட வினாக்கள் கட்டாயமாக பதிலளிக்கக் கூடியதாக இருந்தன.
    இந்நிலையில் கடந்த ஆண்டில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி விகிதம், சென்டம் எண்ணிக்கை சரிந்ததை அடுத்து வினாத் திட்டம் விமர்சனத்துக்குள்ளானது. மாணவர்களின் சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரியேட்டிவ் வினாக்கள் கூடுதலாக இடம்பெறும் வகையில் வினாத் திட்டம் மாறுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கடந்த 2011ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.கணிதப் பாடத்தில் 12,532 மாணவர்கள் சென்டம் பெற்றிருந்த நிலையில், அது கடந்த 2012ஆம் ஆண்டில் 1,141ஆக குறைந்தது. நிகழாண்டில் சென்டம் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புகள் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  3. Dear Venkatesh Sir,

    Neengal kuriyathu thavaru. matrix il thanae 2 five mark question koduthargal. adhu girama pura manavargalukku easy. melum orae question il vargamulam and karani paduthal irandum ketka vaippu illai. D margan vina illavittalum edhirpartha theorems vandhu ullathu. neengal vendumanal parungal, therchi sadhaveedham indha aandu kandippaga adhigam aagum. edhu en karuthu mattum illai, enadhu saga aasiriyargal matrum manavargalin karuthum than. Result ikku piragu meet Comment Box il meet pannovom.

    - By Ravi Ganth.

    ReplyDelete
  4. "புளூபிரின்ட்'படி, கேள்விகள் கேட்கவில்லை : சாதாரண மாணவர்களுக்கு, 15 மதிப்பெண்,"கட்' : 10ம் வகுப்பு கணித ஆசிரியர்கள் ஆவேசம்
    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த கணித தேர்வில்,"புளூபிரின்ட்' (கேள்வித்தாள் அமைப்பு)படி, கேள்விகள் கேட்கவில்லைஎனவும், இதனால், சாதாரண மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, 15
    மதிப்பெண்கள் வரை, பாதிப்பு ஏற்படும் எனவும், கணித ஆசிரியர்கள், ஆவேசமாக தெரிவித்தனர்.
    எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வு துவங்கியதில் இருந்து, தொடர் குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதனால், மாணவர்களும், பெற்றோர்களும், அடுத்தடுத்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு தேர்வுகளிலும், குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், நேற்று கணிதத் தேர்வு நடந்தது. இந்த தேர்வாவது, குளறுபடி இல்லாமல் நடக்குமா என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இதிலும் குளறுபடி நடந்து, மாணவர்களை, மேலும் கவலை அடையச் செய்துள்ளது. எந்தெந்த பாடத்தில் இருந்து, எத்தனை கேள்விகள் கேட்கப்படும், எத்தனை மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும் என்பது குறித்து, முன்கூட்டியே அட்டவணை தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
    இதுதான், "புளூபிரின்ட்' என, அழைக்கப்படுகிறது. இதில், உள்ள கேள்விகள் அமைப்பின்படியே, காலாண்டு, அரையாண்டு, மாதிரி தேர்வுகள், பொதுத்தேர்வுகள் என, அனைத்திற்கும் கேள்விகள் கேட்க வேண்டும். பொதுத்தேர்வுக்கு சற்று முன் நடந்த மாதிரித் தேர்வுகளில், கணித பாட தேர்வில், "புளூபிரின்ட்' படியே, கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், நேற்று நடந்த மிக முக்கியமான பொதுத் தேர்வில், கேள்வித்தாள் அமைப்பின்படி, பல கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும், இதனால்,"ஆவரேஜ்' மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும், கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், கணித ஆசிரியர்கள் குமுறினர். 15 மதிப்பெண்கள் வரை, அவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
    கணித ஆசிரியர்கள் சரமாரி கேள்வி : ஐந்து மதிப்பெண் கேள்வி பகுதியில், 45வது கேள்வியும், இரண்டு மதிப்பெண் கேள்வி பகுதியில், 30வது கேள்வியும், கட்டாய கேள்விகள். இரு கேள்விகளை கொடுத்து, ஏதாவது ஒரு கேள்விக்கு, மாணவர்கள், கட்டாயம் விடை அளிக்க வேண்டும்.
    இந்த நான்கு கேள்விகளும் (தலா 2 கேள்விகள்), முறையே, 2, 3, 5, 8 ஆகிய பாடங்களில் இருந்து கேட்கப்படும் என, "புளூபிரின்ட்'டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    "பிதாகரஸ்' தேற்றம், தொடுகோடு நாண் தேற்றம் ஆகிய பகுதிகளின் கீழ்,"நிரூபணம் இன்றி' என, தரப்பட்டுள்ளது. இந்த பகுதி கேள்விக்கான விடையை எழுதும் போது, சான்று அளிக்க தேவையில்லை. அதன்படி, இந்த பகுதி, இரு மதிப்பெண் கேள்வியில் மட்டுமே கேட்கப்படுகிறது. ஐந்து மதிப்பெண் கேள்வியில், கேட்டது கிடையாது. அதனால், நாங்களும் நடத்தவில்லை.
    ஆனால், "பிதாகரஸ் தேற்றம் எழுதி நிரூபி' என, ஐந்து மதிப்பெண் பகுதியில், கட்டாய கேள்வியாக கேட்டுள்ளனர். "புளூபிரின்ட்'படி, இந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது. மாணவர்கள், கோர்ட்டுக்குச் சென்றால், தேர்வுத்துறை, பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.இது, தேர்வுத்துறையின் தவறு. "புளூபிரின்ட்' விதிக்கு மாறாக, கேள்வியை கேட்டுள்ளனர்.
    "புளூபிரின்ட்'படி, "கணங்களும், சார்புகளும்' என்ற பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண் பகுதியில், இரு கேள்விகள் கேட்க வேண்டும். கணங்கள் பகுதியில், 3 பயிற்சிகளும், சார்புகள் பகுதியில்,ஒரு பயிற்சியும் உள்ளன. கணங்கள் பகுதி, எளிதானவை. மேலும், அதிக பயிற்சிகள் உள்ள பகுதி. கணங்களில் இருந்து, ஒரு கேள்வியை கூட கேட்காமல், சார்புகள் பகுதியில் இருந்தே, 2 கேள்விகளையும் கேட்டுவிட்டனர்.
    இரண்டாவது பாடத்தில் (மெய் எண்களின்தொடர் வரிசைகளும், தொடர்களும்) இருந்து, இரண்டு, ஐந்து மதிப்பெண் கேள்விகள், "புளூபிரின்ட்'படி கேட்கவேண்டும். ஆனால், ஒரே ஒரு கேள்விதான்(கேள்வி எண்:33) கேட்டுள்ளனர்.
    "அல்ஜீப்ரா' பாடத்தில் (மூன்றாவது பாடம்) இருந்து, மூன்று ஐந்து மதிப்பெண் கேள்விகள் கேட்க வேண்டும். ஆனால், இரண்டு தான் கேட்டுள்ளனர். ஒரு கேள்வியை கேட்கவில்லை.
    "அணிகள்' (நான்காவது பாடம்) பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண்கேள்வியில், ஒரு கேள்வி கேட்க வேண்டும். இதற்கு மாறாக, இரு கேள்விகளை கேட்டுள்ளனர். இதேபோல்,"முக்கோணவியல்' (ஏழாவது பாடம்) பாடத்தில் இருந்து, ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி கேட்க வேண்டும். இதற்கு மாறாக, இரு கேள்விகளை கேட்டுள்ளனர்.
    இப்படி, "புளூபிரின்ட்'டிற்கு மாறாக, பல கேள்விகளை கேட்டதன் மூலம்,"ஆவரேஜ்' மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், 15 மதிப்பெண்கள் வரை இழப்பு ஏற்படும்.
    இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive