மத்திய அரசு
ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல் 8% அகவிலைப்படி உயர்வு, ஏப்ரல் 2ந்
தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்றும்,
இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்தன. ஆனால் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நேற்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் 3 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளதால்,
அகவிலைப்படி உயர்வு பற்றிய முடிவு அடுத்த நடைபெற உள்ள அமைச்சரவை
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று செய்தி மற்றும்
ஒளிப்பரப்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரி தெரிவித்தார்.
இந்த அறிவிப்பால் சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்கள், 30
லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதுள்ள விலைவாசி உயர்வை சமாளிக்க உதவியாக
இருக்கும். பரபரப்பாக
எதிர்ப்பார்க்கப்படும் இந்த அறிவிப்பானது வழக்கமாக மார்ச் மூன்றாவது
வாரத்தில் மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்படும். இறுதி செய்யப்பட்ட 8%
அகவிலைப்படி ஜனவரி முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும்.
எனக்கு தினமும் நடக்கும் செய்திகன் அனைத்தையும் மெயிலுக்கு அனுப்பி வைக்கவும் vrs.2009@gmail.com
ReplyDelete