உலகின் உயரிய விருதாக கருதப்படும், "நோபல்" பரிசுடன் வழங்கப்படும்
தொகையை விட, மூன்று மடங்கு அதிக தொகை கொண்டது, "ரஷ்ய நோபல்" பரிசு. இந்த
ஆண்டில் தான், இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
கோல்கட்டாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், உத்தர பிரதேசத்தின் அலகாபாத்
நகரில் செயல்படும், ஹரிஷ் சந்திரா ஆராய்ச்சி நிலைய இயற்பியல் ஆய்வு
கூடத்தில் பணியாற்றி வருகிறார்; இவரின் மாத சம்பளம், 1.5 லட்சம் ரூபாய்.
இயற்பியல் தவிர, பிற பாடங்களை எடுத்துப் படித்தவர்களுக்கு, அறவே
தெரிந்திருக்க வாய்ப்பில்லாத, "ஸ்ட்ரிங் தியரி" என்ற பிரிவில், அசோக் சென்
வல்லுனர். உலக அளவில் வெகு சிலரே, இந்த பாடப்பிரிவை அறிந்திருப்பர்.
உலகில், உயிரினங்கள் முதலில் தோன்றியது எவ்விதம் என்பதை ஆராயும் அரிய
ஆய்வு இது. குடையைத் திறக்கும் போதும், மூடும் போதும், அச்செயல்
புவியீர்ப்பு தத்துவத்தில் இயங்குகிறது என்பதை, குடையை பயன்படுத்து வோர்
அதை உணர்வதில்லை.
அதே போல, உயிரினங்களின் முதல் தோற்றம் குறித்த அரிய தகவல்களை
கண்டறிவதில் இவர் அசகாயசூரர். இவரின் மனைவி, சுமதி ராவ் கூட, இயற்பியல்
வல்லுனர் தான்; இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற போதிலும், இருவருக்கும்
குழந்தை, இயற்பியல் தான்.
அசோக் சென்னின் தந்தையும், இயற்பியல் ஆசிரியர் தான். கோல்கட்டா
பிரசிடென்சி கல்லூரியில் படித்த, உலகின் பணக்கார இயற்பியல்
பேராசிரியர்களில் ஒருவரான சென்னிடம், "இயற்பியலில் உங்களுக்கு ஆர்வம்
எப்படி வந்தது?" என கேட்டபோது, "அது இயல்பாக வந்தது; நான் படித்த
காலத்தில், பத்தில், ஐந்து பேர், இயற்பியலைத் தான் தேர்ந்தெடுத்தனர்.
மேலும், அப்போது எனக்கு வேறு பாடங்களில் ஆர்வம் இல்லை" என்கிறார்.
இவரின் சேவையை பாராட்டி, மத்திய அரசு, இந்த ஆண்டு, "பத்மபூஷண்" விருது வழங்கி கவுரவித்து உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...