தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை
பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்று நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை,
பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில்
வலுவடைந்துள்ளது.
பள்ளி கல்வித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி கடந்த 2003ஆம் ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு மாதம் தோறும் மூவாயிரம் முதல் நான்காயிரத்து ஐநூறு ரூபாய் வரை தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 01.06.2006 முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
ஆனால் தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக கணக்கீடு செய்ய பல முறை கோரிக்கை வைத்தும், போராடியும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதேபோல் தொகுப்பூதியத்தில் 1990 முதல் 1992 வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிப்பலனோடு பணப்பலனும் அளிக்கப்பட்டது. "எங்களுக்கு பணப்பயன் தேவையில்லை குறைந்தபட்சம் பணிப்பயனை அளித்தால் போதும்" என்றும், இவ்வாறு அளிக்காமல் போனால், தேர்வு நிலை மற்றும் பணி மூப்பு பாதிக்கப்படும் எனவும் தெரிவிகின்றனர்.
மேலும் புதிய பென்சன் திட்டத்தில் இவர்களை இணைத்து மாதம் தோறும் ஒரு கணிசமான தொகையும் கடந்த பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பென்சன் திட்டத்தில் வசூலிக்கப்படும் பணம் எந்த கணக்கில் உள்ளது என்பது இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கே தெரியாதநிலை தொடர்கிறது.
எனவே புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். தேர்வு நிலை பெறவும், பணி மூப்பு பாதிக்காமல் இருக்கவும் தொகுப்பு ஊதியத்தில் பணி செய்த மூன்றாண்டு காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும்.
மேலும் பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஜிபிஎப் கடன் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காலமுறை ஊதியம் பெறும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...