Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இயற்பியல் தேர்வு முறைகேடு: தனியார் பள்ளி நிர்வாகி கைது


              பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகியை, நேற்று இரவு, நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவ்வழக்கில், தலைமறைவாக உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூவரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


         கடந்த, மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. மொழித் தேர்வைத் தொடர்ந்து, மார்ச், 11 ல் இயற்பியல் தேர்வு நடந்தது. அத்தேர்வில், நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், முறைகேடு நடந்தது. அதை, தேர்வு கண்காணிப்பாளர் கார்மேகம் கண்டறிந்தார்.

           அதையடுத்து, பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. முறைகேடு விவகாரம் தொடர்பாக, நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், முறைகேடு தொடர்பாக, பள்ளியை சேர்ந்த காவலாளி முருகேசன், அலுவலக உதவியாளர் செல்வக்குமார், உடற்கல்வி ஆசிரியர் யுவராஜூ ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

          அம்மூவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில், பலருக்கு தொடர்பிருக்கும் விவரம் தெரியவந்தது. மேலும், பல்வேறு, "திடுக்கிடும்" தகவல்கள் வெளியாகின. அதன்படி, பள்ளியை சேர்ந்த வரலாறு ஆசிரியர் பிரபு என்பவர், ராசிபுரத்தில் உள்ள சிவானந்தாசாலை அரசுப் பள்ளியில், இயற்பியல் தேர்வு தினத்தன்று, அறை கண்காணிப்பாளராக பணிபுரிந்தார்.

              அவர், இயற்பியல் தேர்வு வினாத்தாளில், ஒரு மதிப்பெண் கேள்விகளை, தனது மொபைல் போன் மூலம் படம் பிடித்து, பள்ளி நிர்வாகியான, அரசு சுகாதார ஆய்வாளர் அருண்குமார், 43, என்பவரது மொபைல் போனுக்கு எம்.எம்.எஸ்., செய்துள்ளார். அதையடுத்து, நிர்வாகி அருண்குமார், பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சரவணன் என்பவர் மூலம் உடனடியாக பதில் தயார் செய்து, அதை அட்டையில் எழுதி மாணவர்களுக்கு காண்பித்துள்ளார்.

             அதற்கு, பள்ளி ஆசிரியர் சண்முகசுந்தரம் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது உள்ளிட்ட விவரம் தெரியவந்தது. அதையடுத்து, பள்ளி நிர்வாகி அருண்குமார், ஆசிரியர்கள் பிரபு, சரவணன், சண்முகசுந்தரம் ஆகிய நால்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
            அதில், பள்ளி நிர்வாகி அருண்குமாரை, நேற்று இரவு, போலீசார் கைது செய்தனர்.

           தலைமறைவான மற்ற மூவரையும், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட அருண்குமார், அரசு ஊழியர் என்பதால், தனது மனைவி சுபாஷினி பெயரில், பள்ளியின் பங்குதாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive