கல்லூரிகளில், குறைந்த அளவு வேலை நாட்கள் உள்ளதால், சிறப்பு வகுப்புகள்
மூலம், வேலை நாட்களை ஈடு செய்ய, ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால்,
கோடை விடுமுறை காலம் குறையும் என, கூறப்படுகிறது.
கல்லூரிகளில், ஒவ்வொரு பருவத்திற்கும் வேலை நாட்கள் உள்ளன. போராட்டத்தை
தொடர்ந்து, குறைந்த அளவு வேலை நாட்கள் உள்ளதால், சனி மற்றும் ஞாயிற்று
கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி, பேராசிரியர்கள் ஈடுசெய்ய உள்ளனர்.
பாடத் திட்டங்களை முடிக்காத ஆசிரியர்கள், தினசரி ஒரு மணி நேரம் கூடுதல்
வகுப்புகள் எடுத்து, பாடத்திட்டங்களை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் தமிழ்மணி
கூறியதாவது: கல்லூரிகளுக்கு, ஒரு பருவத்திற்கு, 90 நாட்கள் வேலை நாள்.
மாணவர்களின் போராட்டத்தால், கடந்த, 16 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தி, பாட திட்டங்களை
ஈடு செய்ய உள்ளனர்.
வரும், 11ம் தேதி தெலுங்கு வருட பிறப்பும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டு
வருவதால், இந்நாளில், மாணவர்களை கல்லூரிக்கு வரவைப்பது மிகவும் சிரமம்.
கோடை விடுமுறையை, 10 நாட்கள் தள்ளி வைப்பதன் மூலம், இதை சரி கட்ட முடியும்.
இவ்வாறு தமிழ்மணி கூறினார்.
கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில்,
சட்ட கல்லூரி திறப்பு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...