"பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை கூறுவது தான், அகில இந்திய தொழில்நுட்பக்
கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி. பல்கலைகளால் அங்கீகாரம் பெற்ற
கல்லூரிகள், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பாடங்களுக்கான அங்கீகாரம்
பெறுவதற்கு, தொழில்நுட்பக் கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை"
என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து, தமிழகத்தைச் சேர்ந்த, சில தனியார் கல்லூரிகள், சுப்ரீம்
கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள், பி.எஸ்.சவுகான்,
கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை
மானியக் குழு சட்டங்களின் படி, கல்லூரிகளுக்கு எந்தவிதமான தடை மற்றும்
உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம், தொழில்நுட்பக் கவுன்சிலுக்கு இல்லை.
வழி காட்டும் குறிப்புகள், பரிந்துரைகள் உள்ளிட்ட ஆலோசனைகளைத் தான், பல்கலை
மற்றும் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கவுன்சில் வழங்க முடியும்.
பல்கலைகளின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், எம்.சி.ஏ., மற்றும்
எம்.பி.ஏ., பாடங்களுக்காக, தொழில்நுட்பக் கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டிய
அவசியமில்லை. தொழில்நுட்பக் கவுன்சில் விதிமுறைப்படி எம்.சி.ஏ., பாடம்
தான், தொழில்நுட்பக் கல்வி வரம்பிற்குள் வருகிறது; எம்.சி.ஏ., இந்த
வரம்பிற்குள் வரவில்லை. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...