"பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்" என, உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளில், இது போன்ற பயிற்சிகளை அளிக்க, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட
பணியிடங்கள், காலியாக உள்ளன. பணி மாறுதல், ஓய்வு என, ஆண்டுதோறும்
பணியிடங்கள் காலியாகி வருகின்றன, இவை, கடந்த, 15 ஆண்டுகளாக,
நிரப்பப்படவில்லை.
தமிழகத்தில், தரம் உயர்த்தப்பட்ட, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பள்ளிகளில், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர் பணியிடங்கள்,
நிரப்பப்படவில்லை. கடந்தாண்டு, 1,200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப, அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை, பணி நியமனம் நடைபெறவில்லை. அரசு
தலையிட்டு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
எடுக்க வேணடும். இவ்வாறு, செல்வராஜ் கூறினார்.
பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி உடற் கல்வி ஆசிரியர் பணியிடத்தை இல்லாமல் ஆக்கும் நிகழ்வு நடக்கிறது. நூறு மாணவர் இருந்தாலும் உடற் கல்வி வேண்டுமா வேண்டாமா என அரசு முடிவெடுக்க வேண்டிய காலம் இது/.
ReplyDeleteமாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி பணியிடத்தை அறவே நீக்கும் நிலை மாற வேண்டும்.