கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கான
உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.) மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை
மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசுகையில் அமைச்சர்
முகமது ஜான் வெளியிட்ட அறிவிப்பு:கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள
விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்
தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உணவு, உறைவிட கட்டணம்
உயர்த்தப்படும்.அதன்படி, தொழிற்கல்வி படிப்புகளுக்கு ரூ. 75 முதல் ரூ. 140
என்பது ரூ. 350 ஆகவும், ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்புகளுக்கு
ரூ. 75 முதல் ரூ. 80 என்பது ரூ. 225 ஆகவும், 11, 12-ஆம் வகுப்பு மற்றும்
இளங்கலை படிப்புகளுக்கு ரூ. 75 முதல் ரூ. 80 என்பது ரூ. 175 ஆகவும்
உயர்த்தப்படும்.இதன் மூலம் 44,961 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.
இதற்காக
ரூ. 9 கோடியே 75 லட்சம் ஒதுக்கப்படும்.நாப்கின் எரிக்கும் கருவிகள் வழங்க
ரூ. 1.39 கோடி: பி.சி., எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினருக்கான 476
மாணவியர் விடுதிகள், 77 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் படிக்கும்
மாணவிகளுக்கு ரூ. 1.39 கோடியில் நாப்கின்களை எரிக்கும் கருவி
வழங்கப்படும்.போர்வைகள் வழங்க ரூ. 1.48 கோடி: பி.சி., எம்.பி.சி.,
சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கான 1,294 விடுதிகளில் தங்கிப்
பயிலும் 80,064 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.48 கோடியில் போர்வைகளும், ரூ. 46
லட்சத்தில் பாய்களும் வழங்கப்படும்.இந்த விடுதி மாணவர்களுக்கு பண்டிகை
நாள்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுக் கட்டணம் பள்ளி விடுதிகளுக்கு ரூ.
2-லிருந்து ரூ. 20 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ. 3-லிருந்து ரூ. 40
ஆகவும் உயர்த்தப்படும். இதற்காக ரூ. 85 லட்சம் ஒதுக்கப்படும்.கல்லூரி
விடுதிகளுக்கு தலா ரூ. 25,000, பள்ளி விடுதிகளுக்கு ரூ. 5,000 என 1,294
விடுதிகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்த ரூ. 1.02 கோடி செலவிடப்படும். 300
விடுதிகளுக்கு ரூ. 18 லட்சத்தில் தீயணைக்கும் கருவிகள் வழங்கப்படும்.
உருது
மொழி மாணவர்களுக்கு பரிசுத் தொகை உயர்வு: உருது மொழியை முதல் அல்லது
இரண்டாவது பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்
தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு
வழங்கப்படும் பரிசுத் தொகை 10-ஆம் வகுப்புக்கு ரூ.10,000, ரூ. 5,000, ரூ.
3,000 ஆகவும், 12-ஆம் வகுப்புக்கு ரூ. 15,000, ரூ. 10,000, ரூ. 5,000
ஆகவும் உயர்த்தப்படும்.மாநில ஹஜ் குழுவினருக்கான நிர்வாக மானியம்
நடப்பாண்டு முதல் ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தப்படும்
என்றார் அமைச்ச்ர் முகமது ஜான்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...