கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, கல்வி ஆண்டு முடிய பதவி நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அண்ணா அரசு
மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்செல்வன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த
மனு: நான் பட்டதாரி ஆசிரியராக 2007 அக்டோபர் 8ம் தேதி முதல் பணிபுரிந்து
வருகிறேன். எனது ஓய்வு நாள் 2013 மார்ச் 31ம் தேதி ஆகும்.
நடப்பு கல்வி
ஆண்டு 2013 மே 31ம் தேதி வரை எனக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கோரி தஞ்சாவூர்
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு பள்ளி யின் தலைமை ஆசிரியர் பரிந்துரை
அனுப்பினார். ஆனால், தலைமைஆசிரிய ரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட கல்வி
அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. கல்வி ஆண்டு முடிய பதவி நீட்டிப்பு வழங்க
உத்தரவிட வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு
நிலுவையில் இருந்தபோதே, தமிழ்செல்வனை பணியிலிருந்து விடுவித்து மாவட்ட
கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்செல்வன், மற்றொரு மனுத்தாக்கல் செய்தார்.
மனுக்களை
நீதிபதி ஹரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்
விஸ்வலிங்கம் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரை பணியிலிருந்து
விடுவித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிறப்பித்த உத்த ரவை ரத்து
செய்தார்.
மேலும், மனுதாரரை மே 31 வரை பணியாற்ற அனுமதிக்கும்படி
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பட்டீஸ்வரம்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...