Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்


           நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியல் வல்லுநரான சி.வி.ராமனால், கடந்த 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்தான், ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்.


           இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்திலிருந்து(IISc) ஓய்வுபெற்ற பின்னர், தனது அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளை தொடரும் விதமாக, பெங்களூரில் இவரால் தொடங்கப்பட்டதுதான் இக்கல்வி நிறுவனம்.
கர்நாடக தலைநகரான பெங்களூரில், வடபகுதியிலுள்ள சதாசிவ நகரில் இக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது.

நிர்வாகம்
அடிப்படை அறிவியல் துறையில், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒரு சுயாட்சி நிறுவனமாக இந்த ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் திகழ்கிறது. கடந்த 1972ம் ஆண்டு, மத்திய அரசின் உதவிபெறும் தன்னாட்சி நிறுவனமாக மாற, ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதனுடைய நிர்வாக அமைப்பு மற்றும் மேலாண்மைக்கு, புதிய விதிமுறைகள் மற்றும் சட்ட அம்சங்கள் உருவாக்கப்பட்டன.

         
இன்றைக்கு, இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய ஆராய்ச்சிகள்,  Astronomy & Astrophysics, Light & Matter Physics, Soft condensed matter and Theoretical Physics, Chemistry, Liquid crystals, Physics in Biology, Signal processing and Imaging & Instrumentation போன்ற துறைகளில் நடைபெறுகின்றன.

 உள்கட்டமைப்பு வசதிகள்
Experimental Physics மற்றும் வானியல் போன்ற துறைகளில் சிறப்பான வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, அனைத்து வசதிகளையும்கொண்டதொரு எலக்ட்ரானிக்ஸ் ஆய்வகம் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, இந்த ஆய்வகத்தில் பல்வேறான ஆராய்ச்சி நடவடிக்கைகளும் நடத்தப்படுகின்றன.

நூலகம்
ஆரம்ப காலத்தில், சி.வி.ராமனால் ஆரம்பிக்கப்பட்ட நூலகமானது, 1972ம் ஆண்டு முதல், மிகப்பெரிய அளவில் மேம்பட ஆரம்பித்தது. அதற்கான வளங்கள், ஆராய்ச்சி நடவடிக்கைகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டன.
Computer science, Electronics, Scientific biographies, General science, Natural & Fine arts, Astronomy & Astrophysics, Theoretical physics, Optics and Liquid crystals போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறான புத்தகங்கள் மற்றும் மெட்டீரியல்கள் உள்ளன. மொத்தத்தில், அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட ஒரு சிறப்பான நூலகமாக இது அமைந்துள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

பிஎச்.டி., படிப்பு
எம்.எஸ்சி., படிப்பில் இயற்பியல் அல்லது வேதியியல் பிரிவில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பி.இ., பி.டெக்., படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுசெய்தல்
விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வில், ஒருவரின் செயல்பாட்டை வைத்து, மாணவர்களின் இறுதித் தேர்வு நடைபெறும். பிஎச்.டி., படிப்பை பற்றி மேலும் விபரங்களை அறிய http://www.rri.res.in/phd_programme.html என்ற இணையதளம் செல்க.

போஸ்ட் டாக்டோரல் உதவித்தொகை
இந்த ஆராய்ச்சிக்கான விண்ணப்பங்கள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன. இக்கல்வி நிறுவனத்தில், மேற்கூறிய ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்புபவர்கள், இங்கே வருகைதந்து, செமினாரில் கலந்துகொண்டு, சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி வழிகாட்டியுடன் கலந்துபேசிவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, அவர்களின் அனுபவத்தைப் பொறுத்து, மாதம் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை வழங்கப்படும்.
இந்த போஸ்ட் டாக்டோரல் நிலையில், மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பிரிவுகள் மற்றும் இதர அனைத்து விபரங்களையும் அறிய http://www.rri.res.in/post_doctoral_fellowships.html என்ற வலைத்தளம் செல்க.

பஞ்சரத்தினம் உதவித்தொகை
இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு, அவர்களின் திறனைப் பொறுத்து, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், பஞ்சரத்தினம் என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது மொத்தம் 3 ஆண்டுகளுக்கானது. முனைவர் பட்டம்பெற்ற பிறகு, போஸ்ட் டாக்டோரல் ஆராய்ச்சியில், குறைந்தது ஒரு பீரியட்டை நிறைவு செய்தவர்களுக்கு, இந்த உதவித்தொகை வழக்கமாக வழங்கப்படுகிறது.
இதைப்பற்றி மேலும் விபரங்களுக்கு : http://www.rri.res.in/pancharatnam_fellowships%20.html

இதர ஆய்வு பயிற்சிகள்
இளம் மாணவர்களை ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சிறப்பான வகையில் ஈடுபடுத்த, SUMMER STUDENT PROGRAMME மற்றும் VISITING STUDENTS PROGRAMME  போன்ற திட்டங்கள் இக்கல்வி நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகின்றன.
VISITING STUDENTS PROGRAMME : http://www.rri.res.in/visitingstudents.html
ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் பற்றி ஒட்டுமொத்த விபரங்களுக்கு http://www.rri.res.in.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive