மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில்,
விருப்பப் பாடமாக, சட்டப்பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
முதலில் வருவோருக்கு முதல்கட்டமாக, சோதனை
முறையில், 20 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், சட்டப் பாடம்
அறிமுகப்படுத்தப்படும். "முதலில் வருவோருக்கே முன்னுரிமை" என்ற
அடிப்படையிலும், இந்த விருப்பப் பாடம் வழங்கப்படும்.
இதனுடன் வேறு, மூன்று விருப்பப் பாடங்களும் மற்றும் மொழிப் பாடமும் இருக்கும். இதுதொடர்பாக, தங்கள் கட்டுப்பாட்டில் செயல்படும், அனைத்து பள்ளிகளின் நிர்வாகிகளுக்கும், சி.பி.எஸ்.இ., அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உலக வரலாற்றில் இடம் பிடித்த மகாத்மா காந்தி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் ஆபிரகாம் லிங்கன் போன்றவர்கள் சட்டப்படிப்பு படித்தவர்கள். தற்கால சூழ்நிலையில், சட்டத்தின் உதவி அனைவருக்கும் தேவைப்படுகிறது. நாம் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதற்கு சட்டத்தை அறிந்திருப்பது அவசியம்.
சட்டம் என்பது விதிகளின் சேகரிப்பு மட்டுமல்ல; சாமானிய மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையும் செய்கிறது. அடிப்படை வசதிகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டும். அதனால், பள்ளி மாணவர்களிடையே, விழிப்புணர்வை ஏற்படுத்த, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், சட்டக் கல்வியை, விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப நீதி அரசியல் அமைப்புகளின் செயல்பாடு, குடும்ப நீதி முறை, தீர்ப்பாயம் உட்பட, பல பிரிவுகள் இடம் பெறும். இவ்வாறு சி.பி.எஸ்.இ., கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...