கோடை விடுமுறையின் போது பள்ளியின் கணினி,
அச்சுப்பொறி, ப்ரொஜெக்டர், எல்.சி.டி மானிட்டர், மடிக்கணினி போன்ற
விலையுயர்ந்த பொருட்கள் உங்கள் பள்ளியில் இருந்தால் அவற்றைப் பாதுகாக்கும்
முழுப் பொறுப்பும் தலைமையாசிரியரையே சாரும்.
அதனால் இவற்றைத் தலைமையாசிரியரோ பிற
ஆசிரியர்கள் சேர்ந்தோ தமது பொறுப்பில் வைத்திருந்துவிட்டு கோடைவிடுமுறை
முடிந்து பள்ளி மறுதிறப்பு நாளன்று மாணவர் பயன்பாட்டுக்குக் கொண்டுவர
ஏற்பாடுகள் செய்துகொள்ளவும். ஏற்கனவே ஒருசில பள்ளிகளில் கோடை விடுமுறையில்
மடிக்கணினி களவு போனதும் அப்பள்ளித் தலைமையாசிரியர் பணிநிறைவு பெற்ற
பின்னரும் அப்பிரச்சினை அவருக்குத் தீராத தலைவலியாக இருந்ததும் நாளிதழில்
வெளியானதாக நாம் அறிந்துள்ளோம்! ஆகவே பள்ளியின் முக்கியத் தளவாடங்களையும்
உபகரணங்களையும் பாதுகாப்பதில் அதிக முனைப்புடன் ஈடுபடுமாறு கேட்டு
கொள்ளப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...