Home »
» மூலத்துறை,கோவை மாவட்டம் மாணவர்களின் வருகை சதவீதத்தினை அதிகப்படுத்திய அரசுப் பள்ளியின் புது முயற்சி
பெரும்பாலான
அரசுப்பள்ளிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனை, மாணவர்களின்
தொடர்ச்சியற்ற வருகை என்பது அனைவரும் அறிந்ததே.கோவை மாவட்டம் காரமடை
ஒன்றியம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அதேவகையான
பிரச்சினை தொடர்ந்து வந்தது. பெற்றோர்கள்
ஆசிரியர்கள் சந்திப்பு மூலமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டும்
சரியான முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இதற்குத் தக்க தீர்வு காண பள்ளியின்
ஆசிரியர் குழு ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்தது.அதாவது மாதந்தோறும்
விடுப்பு எடுக்காமல் வரும் மாணவ,மாணவியரை அடுத்த மாதத்தொடக்கத்தில் நிகழும்
பொது வழிபாட்டில் கௌரவிப்பது என்றும்,அவர்களை புகைப்படம் எடுத்து
பள்ளியின் முன்புறம் உள்ள "FLANNEL BOARD" இல் காட்சிப்படுத்துவது என்றும்
முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு கணித ஆசிரியர் திருமுருகன் அவர்களின் சிறிதளவு
கணினி அறிவும் கைகொடுக்க இத்திட்டம் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக
நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த இரு வருடங்களாக இவ்வகையான ஊக்குவிப்பு
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்த 'டெக்னிக்' மூலம் தற்போது மாணாக்கர்
வருகை சதவீதம் 70 % இருந்து 95% வரை உயர்ந்துள்ளது ஆசிரியர்களையும்
பெற்றோர்களையும் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...