மாணவர்களை அச்சுறுத்தும்விதம், பள்ளிகளில்
உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள் மற்றும் சாட்டைகளை பயன்படுத்த தடை
விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட உடற்கல்வி
ஆய்வாளருக்கு, சி.இ.ஓ., நாகராஜ முருகன் அனுப்பிய உத்தரவு:
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு
சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால்
அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை
வழங்க கூடாது.
உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள், சாட்டைகள்
பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் மாணவர்களை அடித்தாலோ,
தகாத வார்த்தையால் திட்டினாலோ சட்டப்படி குற்றம். தவறு செய்தவர்களை அழைத்து
"கவுன்சிலிங்' கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டும். இதை மீறும் ஆசிரியர்
மீது மாணவர்கள் புகார் அளித்தால் அந்த ஆசிரியருக்கு சிறை தண்டனை கிடைக்க
வழிவகை செய்யப்பட்டுள்ளது.விளையாட்டில் திறமை உள்ள மாணவரை உடற்கல்வி
ஆசிரியர்கள் கண்டறிந்து, ஊக்கப்படுத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...