பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் மாயமான
சம்பவத்தைத் தொடர்ந்து, 8ம் வகுப்பு தனித் தேர்வர்களின் விடைத்தாளர்களை,
தேர்வு மைய பொறுப்பாளர், விடைத்தாள்கள் திருத்தும் மையத்திற்கு, நேரடியாக
கொண்டு வந்து, ஒப்படைக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை,
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 8ம் வகுப்புக்கான தனித் தேர்வு, சமீபத்தில் தொடங்கியது; 19ம் தேதி முடிகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு நாள் தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள், அஞ்சலகம் மூலம், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அனுப்பப்பட்டன. இதற்கு, அரசு சார்பில் தபால் தலை அனுப்பப்பட்டு விடும். தேர்வு பொறுப்பாளர்கள், அதை பயன்படுத்தி, விடைத்தாள்களை அனுப்பி வைத்தனர்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள், விருத்தாசலம், செஞ்சி பகுதியில் மாயமானதைத் தொடர்ந்து, 8ம் வகுப்பு தனித் தேர்வர்களின் விடைத்தாள்களை, தினமும் அஞ்சலில் அனுப்பாமல், அவற்றை பாதுகாப்பாக வைத்திருந்து, தேர்வு மைய பொறுப்பாளர், தேர்வு முடிந்ததும் நேரடியாக, விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...