சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
நிதிநெருக்கடி காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்
பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகஅரசு உயர்மட்ட குழுவை
அனுப்பி வைத்து ஆய்வு செய்தது.
பல்கலைக்கழகத்தில் 11 பிரிவுகளின் கீழ்
முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், நிதி நெருக்கடிக்கு பல்கலைக்கழக
நிறுவனருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதுதான் காரணம் என
உயர்கல்வித்துறை செயலர் அபூர்வாவர்மா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகஅரசு உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநராக உள்ள ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷிவ்தாஸ்மீனா வியாழக்கிழமை மாலை 5.40 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் ஆர்.கிரிலோஷ்குமார், துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், வட்டாட்சியர் எம்.விஜயா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ஷிவ்தாஸ்மீனா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...