சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது,
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாமி பேசுகையில், "மேலூர் தொகுதி, மங்களாம்பட்டி,
பள்ளப்பட்டி, தெற்குத்தெரு, தும்பைப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு
பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுமா" என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் வைகை செல்வன்
பேசியதாவது: மதுரை, மேலூரில், தெற்குத் தெரு மற்றும் தும்பைப்பட்டி ஆகிய
இரு அரசு உயர்நிலைப் பள்ளிகள், 2012-13ம் கல்வியாண்டில், மேல்நிலை
பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இதற்கான அரசாணை, 2012ம் ஆண்டு ஜூன்
மாதம் வெளியிடப்பட்டு உள்ளது.
மற்ற இரு பள்ளிகளை தரம் உயர்த்த, அரசுக்கு செலுத்த வேண்டிய பங்குத் தொகை வழங்கப்படவில்லை. இத்தொகையை வழங்கினால், 2013-14ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
மற்ற இரு பள்ளிகளை தரம் உயர்த்த, அரசுக்கு செலுத்த வேண்டிய பங்குத் தொகை வழங்கப்படவில்லை. இத்தொகையை வழங்கினால், 2013-14ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...