ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட, தனியார் பள்ளி
ஆசிரியர்களை, நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், அடையாளம்
கண்டுள்ளனர்.
நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில்
உள்ள தனியார் பள்ளி ஒன்றில், இயற்பியல் தேர்வின் போது முறைகேடு நடந்ததை,
தேர்வு கண்காணிப்பாளர் கார்மேகம் கண்டறிந்தார். அதையடுத்து, பள்ளியின்
தேர்வு மைய அங்கீகாரம், ரத்து செய்யப்பட்டது. முறைகேடு தொடர்பாக, பள்ளியை
சேர்ந்த காவலாளி முருகேசன், அலுவலக உதவியாளர் செல்வகுமார், உடற்கல்வி
ஆசிரியர் யுவராஜு ஆகியோரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கைது செய்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது, வேறு பள்ளியில் அறை கண்காணிப்பாளராக
பணிபுரிந்த ஆசிரியர்கள், இயற்பியல் தேர்வு வினாத்தாளில் உள்ள, ஒரு
மதிப்பெண் கேள்விகளை மொபைல்போன் மூலம் படம் பிடித்து, பள்ளிக்கு அனுப்பியது
விசாரணையில் தெரிந்தது.
இந்நிலையில், வரலாற்று ஆசிரியர் ஒருவர், இயற்பியல் வினாத்தாளை, தன்
மொபைல் போன் மூலம் படம் பிடித்து, பள்ளி இயக்குனர் ஒருவருக்கு,
எம்.எம்.எஸ்., செய்துள்ளார். இயற்பியல் ஆசிரியர் மூலம், வினாக்களுக்கான
பதில் தயார் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட வரலாற்று ஆசிரியர், எந்தப் பள்ளியில் அறை கண்காணிப்பாளராக பணிபுரிந்தார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...