இரட்டைப்
பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற
பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இந்த இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்படும் 3
வருட பட்டப்படிப்பை படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர்.
அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று (29.04.2013) விசாரணைக்கு வந்ததுது. அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால தடை உத்தரவை இந்த பென்ச் தான் வழங்கியுள்ளது, எனவே இம்மேல்முறையீட்டை வேறு நீதிபதியின் விசாரணைக்கு மனு செய்யுமாறு தெரிவித்தனர். மெலும் இந்த இடைக்கால தடையானது இறுதி தீர்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், வரும் பதவியுயர்வு கலந்தாய்வில் இரட்டைப் பட்டம் முடித்தவர்களையும் பதவியுயர்வு பட்டியலில் வைக்க விரைவில் கல்வித்துறை ஆணையிடும் என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...