பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம்,
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து,
வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள்
விளக்கினர்.
பல்வேறு கல்லூரிகளில் இருந்து 40 க்கும் மேற்பட்ட "ஸ்டால்"கள் இடம்
பெற்றன. எந்த பாடப்பிரிவு தேர்வு செய்யலாம், எந்த கல்லூரியை தேர்வு
செய்யலாம் என்பது குறித்து மாணவர்களும், பெற்றோரும் கல்லூரிகள் குறித்த
விபரங்களை ஸ்டால்களில் அறிந்து கொண்டனர்.
பொள்ளச்சி பி.ஏ. பொறியியல் கல்லூரி, பிரிஸ்க் வாட்டர் ஆகியவை,
நிகழ்ச்சியை இணைந்து வழங்கின. காலையில் துவங்கிய கருத்தரங்கில் "பயோ
இன்ஜினியரிங் மற்றும் பயோ டெக்னாலஜி துறைகளில் எதிர்காலம்" பற்றி டாக்டர்
ரத்னமாலா பேசியதாவது:
அறிவியல் துறையில் உயிரோட்டமான பகுதி பயோ டெக்னாலஜி. இது தொடர்பாக
பி.எஸ்சி.,யில் 25 வகையான படிப்புகள் உள்ளன. மருத்துவம், வேளாண்மை,
சுற்றுச் சூழல், வேதியியல், பொறியியல், உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு
துறைகளில் இப்படிப்பின் பயன்பாடு முக்கியமானது.
மனித மரபணுக்களில் இருந்து இன்சுலின் தயாரிப்பது, நானோ டெக்னாலஜி மூலம்
ஸ்டெம்செல், மனித உறுப்புகள் மாற்றம் போன்றவற்றிலும் இத்துறை
முக்கியத்துவம் வாய்ந்தது. இதுதொடர்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்
பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள்,
ஆராய்ச்சியாளராகவும் பணியாற்ற வாய்ப்புண்டு.
உணவு பதப்படுத்துதல், விவசாய துறையில் அதிக மரபணுக்களை பயன்படுத்தி
புதிய ரக தாவரங்கள் கண்டுபிடித்தல், ஆகியவற்றிற்கு இப்படிப்பு உதவுகிறது.
இந்த படிப்புகளால், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டுதுறை, குடிநீர்
மற்றும் மணல் அனாலிசிஸ் துறைகளில் அரசு பணியிடங்களில் பொறியாளராக
பணியாற்றலாம், என்றார்.
"நானோ டெக்., ஏரோ ஸ்பேஸ், ஏரோ நாட்டிக்கல்" படிப்புகள் குறித்து
எஸ்.ஆர். பாலகிருஷ்ணன் பேசியதாவது: பி.இ., ஏரோ நாட்டிக்கல், மெக்கானிக்கல்,
சி.இ.சி., ஐ.டி., போன்ற படிப்புக்கள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை
அள்ளித்தருபவை. பிளஸ் 2 ல் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும்
கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் படித்த மாணவர்கள் இப்படிப்புகளில் சேரலாம்.
ஏரோ ஸ்பேசில், மெக்கானிக்கலுடன் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து தற்போது
விமானத்தில் ராக்கெட் இன்ஜின் பொருத்தி, அதிவேகத்தில் செல்லும்
சூப்பர்சானிக் ஏரோ ஜெட் தயாரிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஏரோ நாட்டிக்கல்
இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர். நவீன தொழில்நுட்ப முறையில் இப்போது
இத்துறையில் உதிரி பாகங்கள் தயாரிக்கபடுகின்றன.
இத்துறையில் எதிர்காலத்தில் ஏராளமான இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர்.
இத்துறையில் மேற்படிப்பு முடித்தால் பல லட்சம் சம்பளத்தில் வெளிநாடுகளில்
வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...