மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல்
8% அகவிலைப்படி உயர்வு, இன்று ஏப்ரல் 2ந் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை
கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்றும், இதற்கான முடிவு எடுக்கப்படும்
என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பால் சுமார் 50
லட்சம் அரசு ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதுள்ள
விலைவாசி உயர்வை சமாளிக்க உதவியாக இருக்கும்.
பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்படும் இந்த அறிவிப்பானது வழக்கமாக மார்ச் மூன்றாவது வாரத்தில் மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்படும். இறுதி செய்யப்பட்ட 8% அகவிலைப்படி ஜனவரி முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்கப்படும். அறிவிப்பு வந்த உடனேயே அதற்கான அரசாணையும் உடனடியாக வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்ப்பு பரவலாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...