தமிழகம் முழுவதும் நடந்த வணிகவியல் தேர்வு வினாத்தாளில், பல இடங்களில்
எழுத்து பிழைகள் இருந்தன. விடைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய வினாக்களில்,
நான்கு விடைகளுக்கு பதில், மூன்று விடைகள் மட்டும் இடம் பெற்றிருந்தன. இது,
மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
விடைகள் குறைவு: மேலும், 18வது வினாவில், மூன்றாவது
விடையாக "கூட்டுறவு சங்கங்கள்" என்பதற்கு பதிலாக, "கூட்டறவு சங்கங்கள்"
என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. தேர்ந்தெடுத்து விடை எழுதும் பகுதியில்,
ஒவ்வொரு வினாக்களுக்கும், நான்கு விடைகள் தரப்பட்டிருக்கும். ஆனால், வினா
எண் 4, 5, 7, 9, 10 ஆகியவற்றுக்கு, மூன்று விடைகள் மட்டுமே
தரப்பட்டிருந்தன.
பகுதி, "அ" வின் மற்றொரு பிரிவான, கோடிட்ட இடத்தை நிரப்புதல் பகுதியில்,
20 வினாக்கள் உள்ளன. வினா எண் 29ல், "முன்னுரிமை பங்குகள்" என்பதற்கு
பதிலாக, "முன்றுரிமை பங்குகள்&' என அச்சடிக்கப்பட்டிருக்கிறது. "ஆ"
பகுதிக்கான வினா தொகுப்பில், வினா எண் 47ல், "நீடித்த வாழ்வு என்றால்
நீவீர் அறிவது யாது?&' என்பதற்கு பதிலாக, "நீடித்த வாழ்வு என்றார்
நீவீர் அறிவது யாது?" என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.
தேர்வு எழுதிய மதுராந்தகம் மாணவர்கள் கூறியதாவது: வினாத்தாளில்
கொடுக்கப்பட்டிருந்த மூன்று விடைகளில் சரியான விடை தவறாக
அச்சடிக்கப்பட்டிருந்தன. இதனால் நாங்கள் குழப்பத்திற்கு ஆளானோம். சரியான
விடையை தேர்ந்தெடுத்து எழுதும் பகுதியில், நான்கு விடைகள் தரப்பட்டிருக்க
வேண்டும். ஆனால், ஐந்து வினாக்களுக்கு மூன்று விடைகள் மட்டுமே
கொடுத்துள்ளனர். எனவே, தமிழக அரசு அந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க
வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...