மக்காத பிளாஸ்டிக் கழிவுகளான கேரிபேக், வாட்டர் பாட்டில்களை,
நுண்ணுயிரை பயன்படுத்தி சிதைவடைய செய்யும் ஆராய்ச்சியில் வெற்றி கண்ட மதுரை
போராசிரியர் வி.பிரபாகரனுக்கு, டில்லி விஞ்ஞானிகள் அமைப்பு சார்பில்
அச்யூமென்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களில் பல பொருட்கள்
தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் துணைப் பொருட்களை பயன்படுத்தி
தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், மண்ணில் பல ஆண்டுகள் புதைந்து
கிடந்தாலும், மக்காது. இதனால் நிலத்தடி நீர் குறையும், நீர்நிலைகள்
வறண்டுவிடும்.
சுற்றுச்சூழல் சீர்கேடும். தட்ப வெட்ப நிலை மாறுபாடு
அடையும். இதை தடுக்க, மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை மக்கச் செய்யும்
ஆராய்ச்சி மேற்கொண்டேன். அதன்மூலம் நுண்ணுயிர்களை பயன்படுத்தி உயிர் தொழில்
நுட்பம்மூலம் சிதைவடைச் செய்யும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்தது.
இதை பாராட்டி, டில்லி குளோபல் சொசைட்டி விஞ்ஞானிகள்
அமைப்பு "அச்யூமென்ட் விருது" வழங்கியுள்ளது. இத்தொழில்நுட்பம் குறித்து
அறிய 98425 84470ல் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...