இந்திய நாடாளுமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு கல்வி
கற்கும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டம் 2010-ம் ஆண்டு
நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கூறியுள்ளபடி பள்ளிகளில் மாற்றங்களை
செய்ய வேண்டும்.
உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதான வசதிகள்
இருக்க வேண்டும், புதிதாக சேர்க்கப்படுபவர்களில் 25 சதவீதத்தினர்
பின்தங்கிய நிலையிலிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல
விதிமுறைகள் கூறப்பட்டடுள்ளன.
பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அரசு காலக்கெடு நிர்ணையிதிருந்தது. ஆனால் பல பள்ளிகள் இந்த மாற்றங்களை மேற்கொள்ளவில்லை.
இது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பல்லம் ராஜு கூறியதாவது:-
வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பள்ளிகள் கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஆனால் பல மாநிலங்களில் இந்த காலக்கெடுவுக்குள் மாற்றங்கள் நிகழாது என்பது தெளிவாக தெரிகிறது. அதற்காக நாங்கள் நோக்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
2012-ம் ஆண்டு நடந்த மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில், இந்த கால வரையறையை நீட்டிக்கக் கூடாது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதை செயல்படுத்த புதிய குழு ஒன்றை அமைக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாற்றங்களை செய்யாத பள்ளிகளை இந்த சட்டத்தின் கீழ் மூட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு எதிராக பள்ளிகள் நீதிமன்றங்களை நாட வாய்ப்புள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...